வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

மனைவி ஜோதிகாவுடன் கோவில் கோவிலாக சுத்தும் சூர்யா.. கட்டம் சரியில்லைன்னு சொல்லிருப்பாங்களோ?

Suriya-Jyotika: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு குரு உச்சத்தில் இருப்பது போல், சூர்யாவுக்கு ஜாதகத்தில் கட்டம் ஏதும் சரியில்லாமல் இருக்கிறது போல. கடந்த நவம்பர் 14ஆம் தேதி அவருடைய நடிப்பில் கங்குவார் படம் ரிலீஸ் ஆனது. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் சூர்யா இதற்காக கடுமையாக உழைத்தார் என்பது எல்லோருக்குமே தெரியும்.

ஆனால் இந்த படம் பெரிய அளவில் எந்த வெற்றியையும் கொடுக்கவில்லை. இதனால் சூர்யா ரொம்ப சைலன்ட் மோடுக்கு போய் விட்டார். அதே நேரத்தில் சம்பந்தமே இல்லாமல் ஜோதிகா ஒரு அறிக்கை விட்டு தமிழ் சினிமா ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து இருக்கிறார்.

கட்டம் சரியில்லைன்னு சொல்லிருப்பாங்களோ?

சூர்யா டாப் லிஸ்டில் இருக்கும் ஹீரோவா, தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வருகிறாரே என்னும் அளவுக்கு சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்து விட்டன. எது எப்படியோ கார்த்திக் சுப்புராஜ் அல்லது ஆர்.ஜே பாலாஜி சூர்யாவை இந்த பெரிய தோல்வியில் இருந்து காப்பாற்றி விடுவார்கள் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Surya Joe
Surya Joe

படம் பற்றி எதுவுமே பேசாமல் சூர்யா பொதுவெளிகளில் எங்கும் வராமல் இருக்கிறார். இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு மனைவி ஜோதிகாவுடன் சென்று இருக்கிறார் சூர்யா. என்ன திடீரென கோவிலுக்கு கிளம்பிட்டாங்க ஒருவேளை சூர்யாவுக்கு ஜாதகத்தில் கட்டம் சரியில்லை என்று சொல்லியிருப்பாங்களோ என சிலர் அங்கலாய்த்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் கோவிலுக்கு போய் பணத்தை செலவு பண்றதுக்கு பதிலா ஏதாவது ஹாஸ்பிடலுக்கு நன்கொடை கொடுங்கன்னு வழக்கம் போல ஜோதிகாவை சீண்டும் விதமாகவும் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Trending News