செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

எரிகிற நெருப்பில் குளிர் காய நினைக்கும் சூர்யா.. தம்பியாக இருந்தாலும் இதுதான் கெதி

surya: பல வருடங்களுக்குப் பின் பருத்தி வீரன் படத்தின் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் சண்டை சோசியல் மீடியாவில் கொழுந்துவிட்டு எரிகிறது. அதுவும் மைண்ட் வாய்ஸ் நினைச்சு ஒருவரை பற்றி ஒருவர் அப்பட்டமாக அனைத்தையும் உளறி வருகிறார்கள். ஆரம்பத்தில் என்னமோ அமீர் பத்திரிகையாளர்களிடம் பேசிய பொழுது கார்த்தி எனக்கு சரியான மரியாதை கொடுக்கவில்லை.

அவரை ஹீரோவாக உருவாக்குவதற்கு முதல் படிக்கட்டாக இருந்தது நான் தான். அப்படிப்பட்ட என்னை அவர் பொருட்படுத்தாமல் இருப்பது எனக்கு ரொம்பவே சங்கடமாக இருக்கிறது என்று கூறி இருந்தார். இதனை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் வாடிவாசல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடிக்கப் போகிறார்.

இதைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு எனக்கும் சூர்யாவிற்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அதை நான் ஏன் மறுக்க வேண்டும். அந்த வகையில் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் நான் கூட்டணி வைத்து இருக்கிறேன் என்று சொல்லியிருந்தார். இப்படி அமீர், சூர்யா மற்றும் கார்த்தி மீதான இருந்த கருத்துக்களை பகிர்ந்து வந்தார்.

Also read: பட ப்ரமோஷனுக்காக இப்படிலாமா பொய் செல்வது?. பெரும் பரபரப்பை கிளப்பிய சூர்யா

இதனை அடுத்து இவர் எப்படி சூர்யாவையும் கார்த்திகையும் பற்றி பேசலாம் என்று உள்ளே புகுந்தவர் தான் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. அதாவது பருத்திவீரன் படத்தை தயாரித்தவர் ஞானவேல். அப்பொழுது அமீர் நிறைய கள்ளக் கணக்கு காட்டி பணத்தை ஆட்டைய போட்டு இருக்கிறார். அவர் ஒரு சரியான திருடன் என்று கொடுக்கிற பேட்டியில் எல்லாம் அமீரை பற்றி குற்றம் சாட்டினார்.

எரிகிற நெருப்பில் குளிர் காய நினைக்கும் சூர்யா

இப்படி சமூக வலைதளங்களில் இருவரும் மாறி மாறி சண்டை போட்டு வருகிறார்கள். ஆனால் இதை சூர்யா நினைத்திருந்தால் ஆரம்பத்திலேயே எல்லா பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். அதாவது வாடிவாசல் படம் நடிக்கும் சக நடிகராக நினைத்து அமிரிடம் பேசி இருந்திருக்கலாம். அத்துடன் ஞானவேல் ராஜாவிடம் இதை எல்லாம் இப்பம் கிளற வேண்டாம் அப்படியே விட்டுவிடுங்கள் என்று கூறி இருக்கலாம். ஏனென்றால் சூர்யாவிற்கும் ஞானவேல் ராஜாவுக்கும் அண்ணன் தம்பி என்கிற ஒரு பந்தம் இருக்கிறது.

ஆனால் இது எதையுமே செய்யாமல் இவர்கள் போடும் சண்டையை கமுக்கமாக இருந்து வேடிக்கை பார்க்கிறார். அதாவது எரிகிற நெருப்பில் சூர்யா குளிர் காய்ந்து வருகிறார். பண விஷயத்தில் அமீர் ஏமாற்றிய விஷயம் தற்போது ஞானவேல் மூலம் வெளிவந்தால் அடுத்தடுத்து அவரை நம்பி தயாரிப்பாளர்கள் படம் பண்ணுவதற்கு முன் வர மாட்டார்கள். இதை தான் சூர்யாவும் எதிர்பார்க்கிறார் இந்த காரணத்திற்காகவே ஞானவேல் ராஜாவிடம் சுமூகமாக பேச விரும்பவில்லை. ஞானவேல் தம்பியாக இருந்தாலும் பிரச்சனையை வேடிக்கை பார்ப்பது தான் நிலைமையாக இருக்கிறது.

Also read: நூலிலையில் உயிர் தப்பிய சூர்யா.. கங்குவா படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட காரணம் இதுதான்

Trending News