செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

விஸ்வரூபம் பட பிரச்சினையில் குரல் கொடுத்த சிவகுமார்.. கண்டுகொள்ளாமல் இருக்கும் கமல்

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான படம் தான் ஜெய் பீம். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான இப்படம் வெளியான நாள் முதல் தற்போது வரை அடுத்தடுத்து பிரச்சனைகள் உருவானது. தற்போது இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்ததாகவும், வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் சூர்யாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். அந்த பிரச்சனை தான் தற்போது சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு அளிக்கும் அளவிற்கு விஸ்வரூபமாகி உள்ளது.

இந்த பிரச்சனையில் பலர் சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தாலும், தற்போது வரை தமிழ் திரையுலகில் இருந்து யாரும் ஆதரவாக குரல் கொடுத்தது போல் தெரியவில்லை. குறிப்பாக நடிகர் சங்கமோ, தயாரிப்பாளர் சங்கமோ எந்த கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளது. இதுவரை சூர்யாவிற்கு ஆதரவாக சில அரசியல் கட்சிகள் மட்டுமே குரல் எழுப்பி வருகிறார்கள்.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்திற்கு பிரச்சனை எழுந்த போது நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் கமல் வீட்டிற்கே சென்று பத்திரிகையாளர்களை அழைத்து கமலுக்கு ஆதரவாக பேசினார். அப்படி இருக்கும் போது தற்போது சூர்யாவிற்கு ஆதரவாக கமல் ஒரு சிறு உதவி கூட செய்யவில்லை.

மேலும் எதற்கெடுத்தாலும் குரல் எழுப்பி வரும் சீமான் கூட இந்த விஷயத்தில் வாய் திறக்கவில்லை. ஒரு நடிகராக அல்லாமல் நாம் தமிழர் கட்சியின் தலைவராகவாவது அவர் குரல் கொடுத்திருக்கலாம் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இதுதவிர உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் சூர்யா ரசிகர்கள் நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் என்ன செய்கின்றன? சூப்பர் ஸ்டார்கள், உலகநாயகன்கள், தலைகள், தளபதிகள் எங்கே? இன்று சூரியாவுக்கு நடப்பது நாளையே இவர்களுக்கும் நடக்காது என்பதில் என்ன நிச்சயம்? என காட்டமாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Trending News