நடிகர் சூர்யாவின் படம் கடந்த 2 வருடமாக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாமல் இருந்ததால், கங்குவா படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி இருந்தார். ஆனால் அந்த படம், அவர் நினைத்த வெற்றி அடையவில்லை.
இன்னும் சொல்லப்போனால், அதிக ட்ரோல்களுக்கு உள்ளான ஒரு படம் தான் கங்குவா. இந்தியன் 3 படத்தை விட மோசமான ட்ரோல்களை சந்திக்க படத்தின் ப்ரோமோஷனில் கொடுத்த பில்ட் அப் முக்கிய காரணமாக உள்ளது.
இந்த நிலையில், படம் தோல்வி அடைந்த ஒரு வாரத்துக்கு சூர்யா மிகவும் Depressed-ஆக இருந்ததாக கூறப்படுகிறது. மனைவி ஜோதிகாவுடன் கோவிலுக்கு சென்று பூஜையெல்லாம் செய்தார்.
அப்போது மிகுந்த சோர்வோடு காணப்பட்ட சூர்யா தனது தோல்வியை நினைத்து துவண்டு போகாமல், அடுத்தடுத்த வேளைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.
Fire Mode-ல் இருக்கும் கங்குவா..
தற்போது அவர் தனது அடுத்த படமான சூர்யா 44 படத்தை தான் எதிர்பார்க்கிறார். மேலும் அடுத்தாக ஆர்.ஜெ. பாலாஜி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து முக்கியமான படம் ஒன்றில் அவர் நடிக்க போகிறார். அது அவர் ஹிந்தியில் நடிக்கும் கர்ணா படத்தை விட, முக்கியமான படம் என்று கூறப்படுகிறது.
சூர்யா அடுத்து நடிக்க போகும் பான் இந்தியன் படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி தான் இயக்குகிறார். சமீபத்தில் அவர் எடுத்த லக்கி பாஸ்கர் படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அவர் சூர்யாவை வைத்து ஒரு PAN India படம் எடுக்க போகிறார் என்று கூறப்படுகிறது.
அதே போல லக்கி பாஸ்கர் படத்தை தயாரித்த சித்தாரா நிறுவனம் தான் சூர்யா படத்தை தயாரிக்க போகிறதாம். இந்தியாவில் மாருதி கார் அறிமுகமான கதை தான் இது என்றும் தகவல் கிடைத்துள்ளது. இதை கேட்ட ரசிகர்கள், அப்போ சூரரை போற்று படம் மாதிரி ஒரு தரமான படம்-ன்னு சொல்லுங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.