ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

ஜெய் பீம் போல் உண்மை கதையை கையில் எடுக்கும் சூர்யா.. 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே அவதாரம்

சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் சமூக அக்கறை கொண்ட நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. அந்த வகையில் சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்களை தயாரித்துள்ளது. இதில் சூரரைப் போற்று படம் சுதா கொங்கரா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகி இருந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் இதே கூட்டணியில் ஒரு படம் உருவாக இருக்கிறது. ஜெய் பீம் படத்தை மிஞ்சும் அளவுக்கு ஒரு உண்மை கதையை தான் படமாக எடுக்க இருக்கிறார்கள். அதாவது இந்த படத்தில் ஒரு கல்லூரி படிக்கும் 18 வயது இளைஞனாக சூர்யா நடிக்க இருக்கிறார்.

அதாவது 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. உயர்நிலைக் கல்வியில் இந்தி கட்டாயம் என்று கூறப்பட்ட போது கல்லூரி மாணவர்கள் எதிர்த்து போராடினர். மதுரையில் நான்கு மாசி வீதியில் ஊர்வலம் நடைபெறும்போது காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து கல் வீசப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல் அந்தக் கட்சியில் இருந்தவர்கள் அருவாளால் மாணவர்களை சரமாரியாக வெட்டியதாக அப்போது மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்தது. இதன் விளைவாக 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றுவிட்டது. அப்போதுதான் திமுக ஆட்சியை அமைத்தது. அதன் பிறகு தேசிய கட்சி தமிழகத்தில் புறக்கணிக்கப்பட்டதாக ஒரு கூற்று இருக்கிறது.

ஆகையால் இந்த கதையில் தான் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த 2d என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே தெரிய வரும். ஆனால் சூர்யா இந்த படத்தில் கல்லூரி மாணவனாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியான செய்திதான்.

இப்போது சூர்யா மாணவ, மாணவிகளுக்கு நிறைய உதவிகள் செய்து வருகிறார். வருங்காலத்தில் அவர் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக இந்த படம் மற்றும் ஜெய் பீம் போன்ற படங்கள் உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சுதா கொங்கரா சூர்யா கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News