வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அன்றே கணித்த சூர்யா, தவறான படத்த ஓட வைக்காதீங்க! நேரம் பார்த்து வைரலாகும் நெட்டிசன்கள்

ஒரு படம் வெளியாகி பேசு பொருளாவதும், விவாதம் எழுப்புவதும், ரசிகர்களால் வரவேற்கப்பட்டு அது கொண்டாடப்பட்டு, வசூல் வாரிக் குவிப்பது அந்தப் பட த்தின் கதை, திரைக்கதை ஆகியவற்றைப் பொருத்தே அமைகிறது. அதிலும் பாகுபலி மாதிரி ஒரு பீரியட் பிலிம் என்றால் அதற்கு எடுக்கும் காலம், மெனக்கெடல், வி.எஃப்.எக்ஸ், நடிகர்களின் உழைப்பு, இசையமைப்பாளரின் இசைக் கோர்ப்பு, கடைசியாக எடிட்டிங் மற்றும் சவுண்ட் மிக்ஸிங் முக்கிய பங்கு வகிக்கிறது.

சூர்யா நடிப்பில், சிவா இயக்கத்தில் நவம்பர் 14 ஆம் தேதி வெளியான படம் கங்குவா. இப்படம் உண்மையிலேயே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் மக்கள் இதைக் பெரிதாக எடுக்கவில்லை என்றாலும், படக்குழுவினர் புரமோசன் செய்த போது கூறிய ஓவர் ஹைப், ரூ. 2 ஆயிரம் கோடி வசூல் குவிக்கும், உலகம் முழுவதும் 11,500 தியேட்டர்களில் ரிலீஸ் இதெல்லாமும் அவர்களாகவேதான் கூறினர்.

அவர்கள் கூறியபடி எல்லாம் பட த்தில் இருக்கும் என ஆவலோடு தியேட்டருக்குச் சென்று முதல் நாள் முதல் ஷோவை பார்த்த ரசிகர்கள், காட்டுக் கத்தல், கதறவிடராங்க, கதை புரியவிலை, வி.எஃப்.எக்ஸ் சரியில்லை என குறைகூறினர்.

ஒரு படம் நன்றாக இருந்தால் அதை கொண்டாடுவதும் சரியில்லை என்றால் விமர்சிப்பதும் ரசிகர்கள் கையில்தான் உள்ளது. இதேபட த்துக்கு முன் மாதிரியாக 10 ஆண்டுகளுக்கு முன் வந்த பாகுபலி படத்துக்கு சரியாக நடிகர் தேர்வு திரைக்க்தை 2 ஆம் பாகத்துக்கான லீட் என எல்லாம் பொருந்தி இருந்தது. அதனால் கொண்டாடினர்.

ஆனால், இப்பட த்துக்கு சரியான திட்டமிடல் இல்லையோ என கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், திட்டமிட்டு சூர்யா படத்துக்கு விமர்சனம் முன் வைக்கப்படுவதுபோல ஜோதிகா கூறியிருந்தார். இதுவும் கண்டெண்ட் ஆகி விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கங்குவாவுக்கு எதிர்மறை விமர்சனம்

இன்று கங்குவாவை விமர்சிக்கும் அதே ரசிகர்கள்தான் வாரணம் ஆயிரம், அயன், சிங்கம் 1, சூரரைப் போற்று படங்களை கொண்டாடினர். இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா, சரியான படத்தை மட்டுமே ஓட வையுங்கள். அது என்னுடைய படமாக இருந்தாலும் சரி, தவறான படத்தை ஓட வைக்காதீர்கள்.

அப்போதுதான் நல்ல கதைக்காக படம் ஓட முடியும் என்று பேசியிருந்தார். எனவே இதனால்தான் கங்குவாவில் இத்தனை குறைகள் இருப்பதால் இது தவறான படமென நினைத்து ரசிகர்கள் கடும் எதிர்வினை ஆற்றினரோ என கேள்வி எழுந்து வருகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சூர்யா – சிவாவின் பெரிய முயற்சி, நடிப்பு எல்லாம் ஓகே. ஆனால் சரியான திட்டமிட்டு, அனைத்தையும் சீரிய முறையில் திரையில் காட்சியளிக்க முயன்றிருந்தாலோ, ஓவர் ஹைப் ஏற்றாமல் விட்டிருந்தாலோ கூட ரசிகர்கள் இதனை இப்படி விமர்சித்திருக்க மாட்டார்கள் என பலரும் கூறி வருகின்றனர். இத்தனை விமர்சனத்துக்கு மத்தியிலும் இப்படம் ரூ.150 கோடி கிளப்பில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Trending News