தமிழ் சினிமாவில் நந்தா, பிதாமகன் படத்திற்குப் பிறகு மீண்டும் 20 வருடங்கள் கழித்து பாலாவின் இயக்கத்தில் சூர்யா தனது 41-வது படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ரெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனமே தயாரிக்கிறது.
மீனவர்களின் பிரச்சனையை மையமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் 34 நாட்கள் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. அப்பொழுது பாலா மற்றும் சூர்யா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சூர்யா படபிடிப்பு தளத்தில் இருந்து கிளம்பி விட்டதாகவும் இனிமேல் படம் வெளியாவது சந்தேகம் என்றெல்லாம் வதந்திகள் கிளம்பியது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சூர்யா தற்போது சூசகமாக ட்விட் ஒன்றை தட்டிவிட்டு நெட்டிசன்களின் வாயை அடைத்திருக்கிறார். இந்த ட்விட்டர் பதிவில், ‘மீண்டும் படப்பிடிப்புக்கு செல்ல ஆர்வமாக உள்ளேன்’ என குறிப்பிட்டு பாலா-சூர்யா இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை அதில் பதிவிட்டிருக்கிறார்.
ஏற்கனவே சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் விமர்சனத்திலும் வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் ரீச் ஆனது. ஆனால் அதைத் தொடர்ந்து இவருடைய கடைசியாக வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்காததால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலாவுடன் கூட்டு சேர்ந்து தன்னுடைய 41-வது படத்தில் எப்படியாவது சூப்பர் ஹிட் கொடுக்க வேண்டும் என சூர்யா வெறிகொண்டு தன்னுடைய முழு முயற்சியையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் பாலா-சூர்யா இடையே இருக்கும் மோதல் என்ற செய்தி, வதந்தி என அவரே தற்போது ஒத்துக் கொண்டதால் படம் ட்ராப் ஆகவில்லை. நிச்சயம் கோவாவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கப் போகிறது. அதற்கான முழு ஏற்பாடும் கோவாவில் நடைபெற்று வருகிறது. ஒருவேளை நிஜமாகவே பாலா-சூர்யா இருவருக்கும் கருத்துவேறுபாடு இருந்திருக்கலாம்.
அது தற்போது சரியானதால் மீண்டும் படப்பிடிப்பிற்கு செல்ல ஆர்வமாக இருக்கிறேன் என பாலாவிற்கு நாசூக்காக சொல்கிறாரா எனவும் நெட்டிசன்கள் இதை வைத்து மீண்டும் ஒரு புரளியை கிளப்புகின்றனர். எது எப்படியோ சூர்யா போட்ட ட்விட்டரின் மூலம் சூர்யா-பாலா இணைந்திருக்கும் இந்த படம் டிராப் பார்க்கவில்லை என்பது உண்மை.
