ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

பழிக்கு பழி தீர்க்கும் சூர்யா.. அருண் விஜய் படத்தை வெளியிட மறுப்பதற்கு இப்படி ஒரு காரணமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான சிங்கம் படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்தை ஹரி இயக்கியிருந்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் நல்ல நட்பு இருந்ததால் தொடர்ந்து சிங்கம் 2 ,சிங்கம் 3 போன்ற படங்கள் இவர்களது கூட்டணியில் வெளியானது.

சினிமாவைப் பொருத்தவரை நண்பர்களாக இருப்பவர்கள். அதன் பிறகு எதிரியாக மாறுவது சகஜம் தான் அதற்கு காரணம் ஒரு சில கருத்து வேறுபாடுகள் தான் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் சூர்யாவிற்கும் ஹரிக்கும் ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட அதன் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.

முதலில் ஹரி யானை படத்தை சூர்யா வைத்து இயக்குவதாக இருந்தது. ஆனால் சூர்யா அதற்கு மறுப்பு தெரிவிக்க ஹரி தனது உறவினரான அருண் விஜய்யை வைத்து யானை படத்தை எடுத்து முடித்தார். சமீபத்தில் கூட இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

சூர்யா தயாரிப்பில் அருண் விஜய் ஓ மை டாக் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அருண் விஜய் மகன் சினிமா துறையில் அறிமுகமாக உள்ளார். அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள யானை படம் வெளியாக உள்ளதால் சூர்யாவிற்கு தற்போது கோபம் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் மற்றும் அருண் விஜய் நடித்த யானை திரைப்படம் இரண்டும் ஒரே நாளில் திரையில் வெளியாக இருந்தது. இதனால் சூர்யாவிற்கு ஹரி மீது கடும் கோபம் இருந்தது. ஹரியை பழி வாங்குவதாக நினைத்து தற்போது அருண் விஜய்யின் இந்த படத்தை OTT-யில் வெளிவராதாம்.

இந்த மாதம்  வெளியிட இருந்தது ஆனால் தற்போது மறுத்து வருவதாக கூறி வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் மியூசிக் சரியாக அமைக்கப்படவில்லை என்பதால் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். தயாரிப்பாளர் OTT தளத்தில் வெளியிட தாமதித்தால் நஷ்டம் அவருக்கே என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Trending News