வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சூர்யா 45 பட கதையைக் கேட்டுட்டு சூர்யா என்ன சொன்னார்? இப்டியும் நடக்குமா? RJ பாலாஜி ஓபன் டாக்

சூர்யா 45 படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கவிருக்கும் நிலையில், அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடம் “சூர்யாவிடம் கதை கூறும் போது எப்படி இருந்தது. இந்தக் கதையைக் கூறும் போது அவரது ரியாக்சன் எப்படி இருந்து” என ரசிகர் ஒரு கேள்வி எழுப்பினார்.

சூர்யாவிடம் கதை கூறியது பற்றி ஆர்.ஜே.பாலாஜி கூறியதாவது:

இதற்குப் பதிலளித்த ஆர்.ஜே.பாலாஜி, “ரொம்ப செமையா இருந்துச்சு. அனுபவம் எனும் போது, அந்த ஐந்து வருடம் நான் எப்படி இருந்தேன் என்பது போல் அந்த கேள்வி உள்ளது. ரொம்ப ஷார்டாக சொல்லனும்னா. நான் ஒருமணி நேரம் அவரிடம் கதை சொன்னேன். ரொம்ப ரேண்டமாக இருந்து. எனக்கு ஒரு கால் வந்தது. அதில் உங்களிடம் ஒரு கதை இருக்கிறது என கூறினீர்களே, அதை சொல்ல முடியுமா என்று கேட்டனர்.

நானும் சரி என்று சொல்லிவிட்டு சூர்யா சாரை மீட் பண்னினேன். அன்று காலையில் 10 மணிக்கு அவரிடம் கதை கூறினேன். 11 மணிக்கு அவரிடம் கதையைக் கூறிவிட்டேன். இதைக் கேட்ட சூர்யா சார், கதை சூப்பரா இருக்கு. இதை நான் பண்றேன். ஒரு 15, 16 வருஷத்துக்கு அப்புறம் கதையைக் கேட்டுவிட்டு நான் ஓகே சொல்ற படம் இதுதான் என்றார்.

எனக்கு மிகவும் ஹேப்பியா இருந்துச்சு. இப்படத்தில நிறைய ஸ்வீட் பார்ட்ஸ் இருக்கு. இதை நிச்சயம் நான் பண்றேன் என்றார்.இல்ல போங்க லெட்டர் போடறோம். யோசிச்சு சொல்றோம். பார்த்திட்டு சொல்றோம் என்று கூறாமல் ஆன் தி ஸ்பாட்டில் இது நடந்தது.

இப்படக் கதையை ரொம்ப நாள் உட்கார்ந்து எழுதினேன். இப்போது சூர்யா நடிக்க இருப்பதால் மீண்டும் அதில் 2 வெர்சன் எழுதிவிட்டேன். அவருக்கு ஏற்ற மாதிரி என்ன இதில் செய்யலாம். ஆனால் மையக் கதையைத் தொடக் கூடாது. அதைச் சுற்றி என்ன செய்யலாம் என்று யோசித்து எழுதி வருகிறேன்.

நான் கூறிய கதையைக் கேட்ட சூர்யா சாருக்கு பிடித்த மாதிரி, இப்படம் வெளிவந்த பின் மக்களுக்கும் பிடித்திருந்தால் நாம் ரொம்ப மகிழ்ச்சியடைவேன்.” என்று தெரிவித்துள்ளார்.

சூர்யா தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வரும் நிலையில், இப்பட த்தை முடித்துவிட்டு, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் இணைவார் என தகவல் வெளியாகிறது. ஏற்கனவே ஆர்.ஜே.பாலாஜி எல்.கே.ஜி. மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள நிலையில் அடுத்து சூர்யா நடிப்பில் புதிய படத்தை இயக்கவிருப்பதால் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

Trending News