Vijay Sethupathi: விஜய் சேதுபதியின் மகன் என்ற அடையாளம் வேண்டாம் என்று சொன்னாலும் சூர்யாவுக்கு அதுதான் விசிட்டிங் கார்டாக இருக்கிறது. அனல் அரசு இயக்கத்தில் அவர் நடித்துள்ள பீனிக்ஸ் டீசர் சமீபத்தில் வெளியானது.
ஆனால் அதில் இருந்த ஓவர் பில்டர், ஹீரோயிசம் என பெரிய அளவில் டீசர் கவனம் பெறவில்லை. அது மட்டும் இன்றி டீசர் வெளியீட்டு விழாவிற்கு விஜய் சேதுபதி வந்திருந்ததும் விமர்சனமாக மாறியுள்ளது.
ஏனென்றால் இப்படத்தின் பூஜையின் போது சூர்யா மட்டும்தான் வந்திருந்தார். இது குறித்து அப்போது பத்திரிகையாளர்கள் கேட்டபோது அப்பாவுடைய அடையாளம் வேண்டாம் என்று தான் சூர்யா என என் பெயரை மட்டும் போட்டு இருக்கிறேன்.
அதனால்தான் அப்பா வரவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் டீசருக்கு மட்டும் விஜய் சேதுபதி ஏன் வந்தார் என அவரிடம் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் சூர்யா அதற்கு சரியான விளக்கம் கொடுக்காமல் அப்போது நான் கொஞ்சம் பதட்டமாக இருந்தேன் என சமாளித்தார்.
ஓவர் ஹீரோயிசம் காட்டும் சூர்யா
இப்படி பல இடங்களில் அவருடைய பேச்சு ட்ரோல் செய்யும் விதமாக இருக்கிறது. அதேபோல் கொஞ்சம் ஆட்டிட்யூட் காட்டுகிறாரோ என்று கூட நினைக்க வைக்கிறது.
உண்மையில் விஜய் சேதுபதி இவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் கூட எதார்த்தமாக இருப்பார். ஆனால் சூர்யா அப்பாவின் பெயரை டேமேஜ் செய்து வருகிறார்.
இப்படி ஆரம்பத்திலேயே ஓவர் ஆட்டம் ஆடினால் சினிமாவில் நிலைக்க முடியாது. இங்கு தலைக்கனத்தை விட தன்னடக்கம் தான் முக்கியம். இதை சூர்யா புரிந்து கொண்டால் நிச்சயம் ஹீரோவாக தாக்குப் பிடிப்பார்.
அதேபோல் நடிப்பு திறமையும் இங்கு ரொம்ப முக்கியம் விஜய் சேதுபதியின் மகன் என்பது ஒரு அடையாளமாக இருந்தாலும் தன்னை தக்க வைத்துக் கொள்ள சூர்யா இன்னும் பயிற்சி எடுக்க வேண்டும். அது டீசரிலேயே வெளிப்படையாக தெரிந்தது.
ஓவர் ஆட்டிட்யூட் காட்டும் சூர்யா சேதுபதி
- மார்க்கெட்டை தட்டிப் பிடிக்க கம்மி சம்பளம் வாங்கிய விஜய்சேதுபதி
- விஜய் சேதுபதி வாரிசின் பீனிக்ஸ் டீசர் எப்படி இருக்கு.?
- மனைவி, பிள்ளைகளுடன் க்யூட் போஸ் கொடுத்த விஜய் சேதுபதி