புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இயக்குனரை கைகழுவி விட்ட சூர்யா.. தலைவரைப் பார்த்து கத்துக்கோங்க பாஸ்

சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா தனது 41வது படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் வெளியாகி இணையத்தில் ட்ரோலை சந்தித்த படம் அஞ்சான். இப்படத்தை லிங்குசாமி இயக்கி, தயாரித்திருந்தார். லிங்குசாமி பல வெற்றி படங்களை கொடுத்து இருந்தாலும் அஞ்சான் படம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

இதனால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் நடுவில் மிகப்பெரிய பிரேக் எடுத்துவிட்ட தற்போது தெலுங்கில் தி வாரியர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இடைப்பட்ட காலத்தில் லிங்குசாமிக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. மீண்டும் சூர்யா கூட அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவில்லை.

தற்போது லிங்குசாமியின் நிலைமைதான் நெல்சன் திலீப்குமாருக்கு வந்திருந்தது. அதாவது நெல்சன் பீஸ்ட் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே ரஜினியின் தலைவர் 169 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பீஸ்ட் படம் வெளியாகி இணையத்தில் கேலி, கிண்டலுக்கு உள்ளானது.

இதனால் தலைவர் சூப்பர் ஸ்டார் தன் படத்தை நெல்சன் இயக்க சம்மதிக்கமாட்டார் என்று இணையத்தில் செய்திகள் வெளியானது. ஆனால் தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவர் 169 படத்திற்காக எடுத்த போட்டோ ஷூட் புகைப்படத்தை வைத்து நெல்சன் தான் இப்படத்தை இயக்க உள்ளார் என சிம்பாலிக்காக சொன்னார்.

மேலும் சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இருந்தது. ஜெயிலர் என இப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நெல்சன் தோல்வி படத்தை கொடுத்தாலும், தற்போது நான் நிராகரித்தால் நெல்சனின் திரை வாழ்க்கை பாதிக்கும் என தலைவர் இவ்வாறு செய்து பெரிய மனுஷன் என்பதை நிரூபித்துள்ளார்.

Trending News