திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நந்தினி மீது பாசத்தை கொட்டும் சூர்யா.. மாமனார் குடும்பத்துக்காக சுந்தரவள்ளியை அவமானப்படுத்திய மகன்

Moondru Mudichu Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மூன்று முடிச்சு சீரியலில், சூர்யா என்ன தான் குடித்துவிட்டு நிதானமாக இல்லாமல் இருந்தாலும் நந்தினிக்கு ஒரு கஷ்டம் என்றால் முதல் ஆளாக நின்று சப்போர்ட் பண்ணுவது பார்க்க நன்றாக இருக்கிறது. ஆனாலும் நந்தினி மற்றும் நந்தனின் குடும்பமும் தற்போது சுந்தரவல்லியிடம் அவமானப்பட்டு நிற்பதற்கு ஒரு விதத்தில் சூர்யாவும் தான் காரணம்.

அந்த வகையில் இனி எப்பொழுதுமே நந்தினி குடும்பத்திற்கு அவமானம் வராதபடி சூர்யா பாதுகாக்க வேண்டும். தற்போது நந்தினி குடும்பம், நந்தினியை பார்ப்பதற்கு சுந்தரவல்லி வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அப்படி நந்தினியை பார்த்து பேசி விட்ட பிறகு நந்தினி குடும்பம் சாப்பிடும் போது சுந்தரவல்லி அசிங்கப்படுத்தி பேசி அவமானப்படுத்தியதால் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது பாதிலேயே எழுந்து போய் விடுகிறார்கள்.

இது தெரிந்த நந்தினி தன்னுடைய குடும்பத்தை தேடி கண்டுபிடிக்கிறார். பிறகு அனைவருக்கும் ரோட்டு கடையில் சாப்பாடு வாங்கி கொடுத்து சாப்பிட வைக்கிறார். அந்த நேரத்தில் சூர்யா அவர்களைப் பார்த்ததும் என்னாச்சு ஏன் இங்கே உட்கார்ந்து சாப்பிடுகிறீர்கள் என்று கேட்கிறார். உடனே நந்தினியின் தங்கை புனிதா உங்க அம்மா தான் எங்களை அவமானப்படுத்தி சாப்பிட விடாமல் வெளியே அனுப்பிட்டாங்க என்ற உண்மையை சொல்கிறார்.

அத்துடன் நந்தினியும் இது தெரிஞ்சு நீங்க என்ன பண்ண போறீங்க, உங்க அம்மாவை கோபப்பட்டு பார்க்கிறதுக்காக நீங்க ஏதாவது பேசிட்டு போயிருவீங்க. அதுக்கப்புறம் நானும் என் குடும்பம் தான் அவங்க கிட்ட அசிங்கமும் அவமானத்தையும் பெறுவோம். தயவு செய்து மறுபடியும் எங்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று நந்தினி, சூர்யாவிடம் சொல்கிறார்.

ஆனால் சூர்யா, சரி நான் உங்களை பஸ் ஸ்டாப்பில் விடுகிறேன் என்று சொல்லி காரில் ஏற சொல்கிறார். உடனே நந்தினி, நாங்களே போய் விடுவோம். இல்லையென்றால் நாங்கள் உங்கள் காரில் வந்தது தெரிந்தால் உங்க அம்மா இதுக்கும் என்னுடைய கௌரவம் என்ன, வேலைக்காரங்க என்னுடைய காரில் எப்படி வரலாம் என்று தாம் தூம் குதிப்பாங்க. அதனால் ஒன்றும் வேண்டாம் என்று நந்தினி சூர்யாவிடம் சொல்கிறார்.

ஆனால் சூர்யா அவர்கள் அனைவரையும் காரில் ஏற்றிவிட்டு வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார். வீட்டுக்கு கூட்டிட்டு வந்த கையோட சுந்தரவல்லி பார்த்து அவர்கள் ஒன்னும் நம்ம விட்டு தோட்டக்காரங்க இல்ல, என்னுடைய மாமனார் குடும்பம். அவர்களை எப்படி நீங்கள் சாப்பிட விடாமல் அவமானப்படுத்தி வெளியே அனுப்பலாம். அதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு என்று மாமனார் குடும்பத்துக்காக சுந்தரவல்லியை கேள்வி கேட்டு சரியான பதிலடி கொடுக்கிறார்.

இதனை தொடர்ந்து நந்தினி தான் சமைத்து இருக்கிறார் என்று தெரியாத சுந்தரவல்லி மற்றும் சூர்யாவின் அப்பா, அக்கா, தங்கை அனைவரும் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அப்பொழுது அங்கே வந்த சூர்யா, சாப்பாட்டை பார்த்ததும் இது கண்டிப்பா நீங்கள் சமைத்தது இல்லை யாரு சமையல் செய்தார் என்று கேட்கிறார். உடனே அங்கே வேலை பார்த்தவர்கள் நாங்கள் சமைக்கவில்லை நந்தினி தான் சமைத்தார் என்று சொல்லிவிடுகிறார்.

உடனே கோவப்பட்ட சுந்தரவல்லி ஏதோ சாப்பிட கூடாத சாப்பிட்ட மாதிரி ஓவராக சீன் போட்டு வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத சூர்யா, அங்கே இருக்கும் நந்தினி கூப்பிட்டு பாயசத்தை ஊட்டி விடுகிறார். இதை பார்த்து இன்னும் கடுப்பான சுந்தரவல்லி மொத்த கோபத்தையும் நந்தினி மீது காட்டும் விதமாக பொறுமையாக இருக்கிறார்.

சூர்யா இல்லாத போது நந்தினியை வச்சு செய்யும் அளவிற்கு சுந்தரவல்லி சதி செய்யப் போகிறார். என்னதான் சூர்யா, நந்தினிக்கு சப்போர்ட்டாக பேசினாலும் நந்தினியும் பழைய மாதிரி துணிச்சலுடன் சுந்தரவல்லியை எதிர்த்து பேசினால் தான் இந்த நாடகம் என்னும் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.

Trending News