புதன்கிழமை, நவம்பர் 20, 2024

80 கோடிக்கு விலைபோன சூர்யாவின் படங்கள்.. அமேசான்க்கு வாரிக் கொடுத்தது பழிக்குப்பழியா லாபமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் சூர்யாவை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

தற்போது சூர்யா சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மிகப்பிரம்மாண்டமாக செலவு செய்யும் படத்தை உஷாராக சூர்யா தயாரிப்பதில்லை அதற்கு உதாரணமாக எதற்கும் துணிந்தவன் கூறலாம்.

ஆனால் சிறு சிறு பட்ஜெட் படங்களை மட்டும் தயாரித்து பல கோடி அளவில் சூர்யா லாபம் பெறுவதில் வல்லவர் என சினிமா வட்டாரத்தில் இருக்கும் பலரும் கூறி வருகின்றனர். அதாவது இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள அருண் விஜய் மற்றும் அவரது மகன் அர்னவ் விஜய் நடிப்பில் உருவான ஓ மை டாக், சசிகுமார் மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவான உடன்பிறப்பே, தா செ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ஜெய் பீம் மற்றும் அரிசியில் மூர்த்தி இயக்கத்தில் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஆகிய 4 படங்களையும் சூர்யாதான் தயாரித்துள்ளார் அதனால் அமேசான் கொடுத்துள்ளார்.

jai-bheem-cinemapettai
jai-bheem-cinemapettai

இந்த 4 படங்களின் பட்ஜெட்டை மொத்தம் ஒவ்வொரு படத்தின் பட்ஜெட் 10 கோடி ரூபாய். ஆனால் படத்தை அமேசானில் 4 படத்தை 80 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார். அதிலும் ஜெய் பீம் படம் சூர்யா தயாரிப்பதால் அவரது சம்பளம் போக 37 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார். அதாவது படத்தின் ஹிந்தி ரைட்ஸ் உரிமை 13 கோடி படத்தின் பட்ஜெட் 7 கோடி வைத்து 4 படத்தையும் 80 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார். மேலும் சூர்யாவின் சொந்தக்காரரான சுல்தான் படத்தை தயாரித்த எஸ்ஆர் பிரபு  30 படத்தை மொத்தமாக அமேசான் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது சூரிய குடும்பம் அனைத்தும் சிறு படங்களை மட்டும் தயாரித்து லாபம் பெறுவதில் வல்லவர்களாக உள்ளனர் என சினிமா வட்டாரத்தில் இருப்பார்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் ஒரு காலத்தில் சூர்யா தியேட்டரில் நம்பித்தானே படங்களில் நடித்து சம்பாதித்து வந்தார். இப்போது OTT லாபம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக தியேட்டர் உரிமையாளர்களுக்கு படம் கொடுக்காமல் அமேசான் கொடுப்பதும் நியாயமில்லை என சூர்யா மீது கடும் விவாதம் வைத்து வருகின்றனர்.

மேலும் கொஞ்சமாவது சூர்யா திருந்தவேண்டும் இனிமேலாவது பழசை மறக்காமல் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் படம் கொடுக்கவேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். இதில் சூர்யாவிற்கு ஒரு பக்கம் தியேட்டர் உரிமையாளர்களை பழிக்கு பழி வாங்குவதாகவும் மற்றொரு பக்கம் புத்திசாலித்தனமாக லாபம் பெறுவதாகவும் பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News