சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

சூர்யா, அதர்வாவின் இடத்தை தட்டிப்பறித்த பாலாவின் அடுத்த ஹீரோ.. விறுவிறுப்பாக தொடங்கும் வணங்கான்

பாலா இயக்க சூர்யா நடிப்பதாக இருந்த “வணங்கான்” திரைப்படம் கைவிடப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பாலா அவர்கள் 2டி நிறுவனத்தின் தயாரிப்பு மூலமாகவே அதர்வாவை வைத்து “வணங்கான்” படப்பிடிப்பைத் தொடரலாம் என்று ஒரு முனைப்பில் இருந்தார். ஆனால் 2டி தயாரிப்பு நிறுவனம் “வணங்கான்” படத்தை தயாரிப்பதில் இருந்தும் பின்வாங்கியது.

மிக நீண்ட நாட்களாகவே படம் இயக்க வாய்ப்பு இல்லாததாலும், தன் குடும்பத்தில் நடந்த சில பிரச்சினைகளாலும் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார் பாலா. தற்போது “வணங்கான்” படம் கைவிடப்பட்ட நிலையில் வேறு ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்திற்காக காத்திருந்தார்.

Also Read: வணங்கான் கைவிட்டாலும் சூர்யா அடுத்தடுத்து கமிட்டான 5 படங்கள்.. சமரசமாக முடிந்த அருவா மோதல்

ஏற்கனவே பாலாவுடன் சேர்ந்து பணியாற்றிய பல தயாரிப்பு நிறுவனங்கள் அவருடன் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தினால் மீண்டும் அவருடன் இணைய முன்வரவில்லை. பாலாவின் கரடுமுரடான சுபாவத்தினாலும், படத்தின் தயாரிப்பு செலவுகளை பட்ஜெட்டை தாண்டி ஏற்றி விட்டதாலும், எந்த புதிய தயாரிப்பு நிறுவனமும் பாலாவுடன் பணிபுரிய முன்வரவில்லை.

இந்த நிலையில் நடிகர் அருண் விஜய்யின் கால்ஷீட், ஏஜிஎஸ் நிறுவனத்திடம் இருப்பதாக கருதப்படுகிறது. நீண்ட நாட்களாகவே நடிகர் அருண் விஜய், பாலா படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இதனால் ஏஜிஎஸ் மூலம் வணங்கான் படத்தை அருண் விஜய்யை வைத்து மீண்டும் துவக்க பாலா முயற்சி செய்வதாக தகவல்.

Also Read: வணங்கான் படத்திற்கு நோ சொன்ன சூர்யா.. புதிய இயக்குனருடன் சேரும் கூட்டணி

இந்த தகவல் ஏஜிஎஸ் நிறுவனத்தின் மூலமாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. பாலாவின் தரப்பில் இருந்தும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. அந்த அளவிற்கு இந்த செய்தியை ரகசியமாக காத்து வருகிறார் பாலா.

இருந்தும் இத்தகவலை பாலாவின் நண்பரும், “வணங்கான்” கதை விவாதத்தில் பங்கு பெற்ற இயக்குனர் ஏ.எல்.விஜய் அவர்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
“வணங்கான்” படத்தின் கதை விவாதத்தில் ஏ.எல்.விஜய், ஜெயமோகன் போன்ற கலைஞர்கள் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் அருண் விஜய் பாலா கூட்டணியில் உறுதியாக வணங்கான் படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: பொருத்து பொருத்து பார்த்து பொங்கி எழுந்த சூர்யா.. வணங்கான் படப்பிடிப்பில் பாலா செய்த 5 தில்லாலங்கடி வேலை

Trending News