வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும் சிறுத்தை சிவா படம்.. கை மாற்றிய சூர்யா

சூர்யா தற்போது பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் மீனவனாக நடிக்கும் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் சூர்யா கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார்.

சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா இணையும் படம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்றால் தயாரிப்பு நிறுவனம் தான். அவர்களிடம் பணம் இல்லாததால் வெளியில் பைனான்ஸ்சிற்கு பணத்தை வாங்கி தான் படத்தை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் படம் ரொம்ப காலமாக தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இதனால் சூர்யா அந்த தயாரிப்பு நிறுவனத்திடம் பஞ்சாயத்து பேசி இதுவரை பண்ணிய செலவை எல்லாம் சரி செய்து தயாரிப்பாளர் தில் ராஜுவிடம் படத்தை ஒப்படைக்க போகிறாராம்.

ஏற்கனவே தில் ராஜூ ரொம்ப காலமாக சூர்யாவிடம் ஒரு படம் பண்ணி தருமாறு கேட்டுக் கொண்டே இருக்கிறாராம். இதனால் தற்போது சிறுத்தை சிவா, சூர்யா இணையும் படம் தில் ராஜுவிடம் கைமாறு உள்ளது. தற்போது இவரின் தயாரிப்பில் விஜய்யின் தளபதி 66 படம் உருவாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை வம்சி பைடிபைலி இயக்குகிறார். மேலும் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தையும் தில் ராஜூ தயாரிக்கிறார். தொடர்ந்து பெரிய பட்ஜெட்களை தயாரித்து வரும் தில் ராஜூ தற்போது சூர்யா படத்தை தயாரிக்க உள்ளார்.

சூர்யா, பாலா படத்தை முடித்த கையோடு வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் விரைவில் நடிக்கயுள்ளார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

Trending News