வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூர்யாவை டீலில் விட்டாரா வெற்றிமாறன்.? வருஷ கணக்கில் காக்க வைத்த வாடிவாசல், எதிர்பாராத ஷாக்

Actor Suriya: சூர்யா இப்போது ரொம்பவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தின் க்ளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரட்டி விட்டது. அதைத்தொடர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.

இந்தப் படத்தை அடுத்து சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதை அடுத்து லோகேஷ், ரோலக்ஸ் கேரக்டரை வைத்து தனியாக ஒரு படம் இயக்கும் முடிவில் இருக்கிறார். விக்ரம் படத்தில் கடைசி சில நிமிடங்களில் வந்த இந்த கேரக்டர் சூர்யாவுக்கு மிகப்பெரும் புகழாரத்தை தேடி கொடுத்தது.

Also read: சூர்யாவுக்காக ரெண்டு தரமான சம்பவத்தை செய்ய போகும் லோகேஷ்.. ஹாலிவுட் அளவுக்கு எகிற போகும் மார்க்கெட்

அதனாலேயே இப்போது இந்த கேரக்டரை மெயினாக வைத்து படம் எடுக்கும் முடிவில் லோகேஷ் இருக்கிறார். அதை அடுத்து இரும்புக்கை மாயாவி படமும் உருவாக இருக்கிறது. இப்படி சூர்யா அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை கொடுத்து வரும் நிலையில் வாடிவாசல் படம் எப்போதுதான் வரும் என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்து பல மாதங்கள் கடந்த நிலையிலும் எந்த ஒரு அப்டேட்டும் வராமல் இருக்கிறது. விரைவில் படத்தை தொடங்கி விடுவோம் என்று தயாரிப்பாளர் கூறி வந்த நிலையில் சூர்யா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருவது ரசிகர்களுக்கு குழப்பத்தை கொடுத்து வருகிறது. இதன் மூலம் வெற்றிமாறன், சூர்யாவை டீலில் விட்டு விட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Also read: மும்பையில செட்டில் ஆயிட்டீங்களா என கேட்ட ரசிகர்.. சூர்யா சொன்ன பதில் என்ன தெரியுமா?

இந்நிலையில் சூர்யா சமீபத்தில் நடந்த ஃபேன்ஸ் மீட் நிகழ்வில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதாவது வெற்றிமாறன் இப்போது விடுதலை 2 படத்தில் பிசியாக இருக்கிறார். அந்த ஷூட்டிங் முடிந்தவுடன் எப்போது வாடிவாசலில் நடிக்க என்னை கூப்பிடுகிறாரோ உடனே நான் களத்தில் இறங்கி விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இது ஒரு பக்கம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தினாலும் மறுபக்கம் எப்போது அவர் வந்து, எப்போது படத்தை தொடங்குவது என்ற சலிப்பும் ஏற்படத்தான் செய்கிறது. ஆக மொத்தம் வருஷ கணக்கில் காக்க வைத்த வாடிவாசல் இன்னும் தாமதமாகும் என்று சூர்யா கொடுத்துள்ள இந்த ஷாக் ரசிகர்களை கலவரப்படுத்தி இருக்கிறது.

Also read: லோகேஷுடன் இணைய ஆசைப்பட்ட பாலிவுட் பிரபலம்.. ஸ்கிரிப்டை மாற்றி வாய்ப்பு கொடுத்த சம்பவம்

Trending News