Surya who bought the Chennai team: சினிமாவில் இருக்கும் சில நட்சத்திரங்கள் ஓரளவுக்கு பிரபலமானதும் நடிப்பையும் தாண்டி மற்ற விஷயத்திலும் கவனம் செலுத்தி, எந்த அளவுக்கு செட்டில் ஆக முடியுமோ அதை கச்சிதமாக செய்து விடுவார்கள். அந்த வகையில் பலரும் பிசினஸ் பண்ணுவதற்கு அடி எடுத்து வைத்து விட்டார்கள். அப்படித்தான் சூர்யாவும் நடிப்பையும் தாண்டி கிரிக்கெட்டில் களம் இறங்கி இருக்கிறார்.
அதாவது 10 ஓவர்களைக் கொண்ட போட்டிகளாக இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ISPL) தொடர் நடைபெறப் போகிறது. இந்த தொடரில் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், மும்பை, ஸ்ரீநகர், கொல்கத்தா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடரானது வருகிற மார்ச் 2ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தத் தொடரில் உள்ள ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் தான் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். அந்த வகையில் மும்பை அணியை அமிதாப்பச்சன், பெங்களூர் அணியை நடிகர் கிருத்திக் ரோஷன், ஸ்ரீநகர் அணியை அக்ஷய்குமார், ஹைதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம் சரண் வாங்கியுள்ளார்கள்.
Also read: கங்குவாவில் அஜித்தை ஓவர்டேக் செய்த சூர்யா.. 400 கோடிக்கு மேல் எகிரும் பட்ஜெட்
இவர்களைத் தொடர்ந்து சென்னை அணியை சூர்யா சொந்தமாக வாங்கி இருப்பதாக அவருடைய எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். தற்போது சூர்யா இந்த ஒரு பிசினஸை சொந்தமாக வாங்கி இதிலும் லாபத்தை சம்பாதிப்பதற்கு களமிறங்கி விட்டார். ஆனால் தற்போது இவருடைய செயலுக்கு சிவகுமார் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
காரணம் தாகூத் இப்ராகிம் வளர்ந்ததற்கு முக்கிய காரணமே இந்த சூதாட்டம் தான். அதனாலேயே சிவகுமார் பொருத்தவரை கிரிக்கெட் ஒரு சூதாட்டம் என்று நினைக்கக் கூடியவர். அப்படிப்பட்ட இவருடைய கருத்துக்கு எதிராக சூர்யா இந்த பிசினஸை துவங்கியதால் தற்போது குடும்பத்திற்குள்ளேயே வாக்குவாதம் முத்தி தினமும் சண்டை சச்சரவு என வர ஆரம்பித்து விட்டது.
இதுவும் ஒரு காரணம் தான் சூர்யா, ஜோதிகாவுடன் மும்பையில் செட்டில் ஆகி இருப்பது. இதுவரை பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் நல்லது செய்து வந்த சூர்யா தற்போது குடும்பத்திற்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செய்து குடும்பத்தில் இருப்பவர்களிடம் கெட்ட பெயரை வாங்கிக் கொண்டார்.

Also read: ஊர் வாய்க்கு பயந்து வந்த சிவகுமார், கார்த்தி.. கேப்டன் சமாதியில் தேம்பித் தேம்பி அழுத சூர்யா