வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சூதாட்டத்தில் இறங்கிய சூர்யா.. ஜோதிகா மீது கடுப்பில் இருக்கும் சிவக்குமார்

Suriya – Jyothika – Sivakumar : சிவக்குமார் குடும்பம் என்றாலே ஒரு கட்டுக்கோப்பான பெயர் இருக்கிறது. தற்போது வரை சிவக்குமார் என்றால் ஒரு மரியாதை சினிமா துறையிலும் சரி, ரசிகர்களும் சரி கொடுத்து வருகிறார்கள். அதேபோல் தான் தனது மகன்களையும் ஒழுக்கமாக வளர்த்து இருக்கிறார் என்ற பெயர் இருந்துள்ளது.

அதேபோல் தான் இதுவரை சூர்யா, கார்த்தி இருவரும் நடந்து கொண்டு வந்தனர். ஆனால் இப்போது சிவக்குமார் குடும்பத்திற்கு களங்கம் விளைவிக்கும் விதமாக சூர்யா ஒரு செயலில் ஈடுபட்டு இருக்கிறார். அதாவது ISPL கிரிக்கெட் விளையாட்டில் சென்னை அணியை சூர்யா வாங்கி இருக்கிறாராம்.

பொதுவாக கிரிக்கெட் பலருக்கு பிடித்திருந்தாலும் இதுவும் ஒரு சூதாட்டமாக தான் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் மும்பையில் உள்ள பிரபலங்கள் தான் இது போன்ற வேலையில் ஈடுபடுவார்கள். இது சூதாட்டம் என்று தெரிந்தும் சூர்யா இது போன்ற வேலையில் இறங்கி வருகிறார்.

Also Read : ஊர் வாய்க்கு பயந்து வந்த சிவகுமார், கார்த்தி.. கேப்டன் சமாதியில் தேம்பித் தேம்பி அழுத சூர்யா

இதற்கெல்லாம் காரணம் ஜோதிகா தான் என்று ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. ஏனென்றால் ஆரம்பத்திலேயே மும்பைக்கு சூர்யாவை அழைத்துச் சென்றுவிட்டார். இப்போது அவர் சொல்லும் படி தான் தலையாட்டி வருகிறார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

அதோடு மட்டுமல்லாமல் சிவக்குமாருக்கு இதில் துளியும் உடன்பாடு இல்லை என்றாலும் அதையும் மீறி சூர்யா இவ்வாறு செய்திருக்கிறார் என்றும் பல பிரபலங்கள் கூறுகின்றனர். ஆனால் மற்ற மொழிகளில் பிரபலங்கள் கிரிக்கெட் அணியை வாங்கி இருக்கிறார்கள். இதனால் சூர்யா மீது குறை சொல்வதில் எந்த நியாயமும் இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் இந்த கிரிக்கெட் போட்டியில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் போ அணிகள் பங்கு பெறுகிறார்கள். இதில் சென்னை அணியை சூர்யா வாங்கியுள்ள நிலையில், ஹைதராபாத் கிரிக்கெட் அணியை ராம்சரண், மும்பை அணியை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஸ்ரீநகர் அணியை அக்ஷய்குமார் மற்றும் பெங்களூர் அணியை ரித்திக் ரோஷன் வாங்கி இருக்கின்றனர்.

Also Read : சூர்யாவை மிரள வைத்த ரசிகரின் போஸ்டர்.. ஹாலிவுட்டுக்கு டஃப் கொடுக்கும் கங்குவா

Trending News