வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ரெண்டு நாள் கோமாவில் இருந்துட்டு இப்ப அறிக்கை வெளியிட்ட சூர்யா.. அரசாங்கத்துக்கு எதிராக தூக்கிய போர்க்கொடி

Suriya- Kallakurichi Issue: கடந்த இரு தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சியில் சட்ட விரோதமாக விற்பனை செய்து மது அருந்தியதால் பாதிக்கப்பட்டவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் இதுவரை 50 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மற்றும் 100க்கும் மேற்பட்டவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இதற்கு நியாயம் கேட்டு பலரும் அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சினிமா பிரபலங்களும் சிலர் கொந்தளித்து வருகிறார்கள். இதில் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

இவரை தொடர்ந்து தற்போது சூர்யாவும் அரசாங்கத்துக்கு எதிராக போர் கொடியை தூக்கியிருக்கிறார். ஆனால் என்ன கொஞ்சம் லேட்டாக எழுந்திருந்திருக்கிறார். அதாவது இந்த பிரச்சனை கடந்த ரெண்டு நாளாக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இப்பொழுது தான் சூர்யா கோமாவில் இருந்து எழுந்தது போல் அறிக்கை விட்டு இருக்கிறார்.

கள்ளக்குறிச்சி பிரச்சினைக்கு குரல் எழுப்பிய சூர்யா

suriya -kallakurichi
suriya -kallakurichi

எது எப்படியோ சிலரை பார்த்து இப்பவாவது உரிமை குரல் எழுப்ப வேண்டும் என்று தோன்றியது மிகப்பெரிய விஷயம் தான். அந்த வகையில் அரசாங்கத்துக்கு எதிராக வன்மையான முறையில் கண்டிப்பை தெரிவிக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் அவருடைய பதிவை பதிவிட்டு இருக்கிறார். அதில் இயற்கையால் வரும் ஆபத்துகளில் கூட நடக்காத சோகம் தற்போது ஒரு சின்ன கிராமத்தில் அடுத்தடுத்த உயிர்கள் பாதிக்கப்பட்டு வருவது கண்டிக்கத்தக்க விஷயமாக இருக்கிறது.

suriya- kallakurichi
suriya- kallakurichi

ஓட்டு கேட்கும் பொழுது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக மதுவிலக்கு கொள்கையை பற்றி வாய் நிறைய பேசிய பின்பு ஆட்சியைப் பிடித்ததும் அதை கண்டுக்காமல் விட்டது தான் இந்த அளவிற்கு கொண்டு போய் விட்டிருக்கிறது. இதே மாதிரி தான் கடந்த ஆண்டும் விழுப்புரத்தில் அரசாங்கத்தின் அஜாக்கிரதையால் விஷம் கலந்த கள்ளச்சாரத்தை குடித்து 22 பேர் உயிரிழந்தார்கள்.

அப்பொழுதே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருந்தால் இந்த ஆண்டு அந்த ஊருக்கு பக்கத்திலேயே இப்படி கூட்டம் கூட்டமாக இறந்திருப்பதை தடுத்து இருக்க முடியும். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக மாத்தி மாத்தி ஆட்சி செய்து ஒரு பிரயோஜனமும் இல்லை. தமிழ்நாட்டு மக்கள் ஏதாவது ஒரு விடிவுகால பறக்கும் என்று உங்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கையே பொய்யாக்கும் வகையில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதை பார்க்கும்பொழுது வருத்தமாக இருக்கிறது.

டாஸ்மாக்கில் 150 ரூபாய் கொடுத்து மதுவை வாங்க முடியாதவர்கள் 50 ரூபாய்க்கு என்றதும் அதை குடிப்பது அவர்களுடைய பிரச்சனை இல்லை. இதை அரசாங்கம் மெத்தனத்தில் விட்டதுதான் கண்டிக்கத்தக்கதாக இருக்கிறது. இனியாவது அரசும் அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் பார்த்து செயல்பட்டால் எதிர்காலத்தில் இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று தமிழக முதல்வருக்கு சூர்யா அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட பிரச்சினைக்கு குரல் கொடுத்த ஹீரோக்கள்

Trending News