புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விஜய்யை போல் ஒதுக்கி வைத்த சூர்யா.. பொண்டாட்டி பேச்சால் பிரிந்த குடும்பம்

கடந்த சில மாதங்களாகவே விஜய்யின் குடும்ப பிரச்சனை தான் ஊடகங்களில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே அவர் தன் அம்மா அப்பாவை தவிக்க விடுகிறார் என்ற விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. அதிலும் மனைவி பேச்சை கேட்டு தான் அவர் தன்னுடைய அப்பாவை ஒதுக்கி வைத்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல்களும் பகீர் கிளப்பி வருகிறது.

இந்நிலையில் அவரைப் போலவே சூர்யாவும் தன் குடும்பத்தை கண்டு கொள்வதே கிடையாதாம். அதிலும் தற்போது அவர் சென்னையை விட்டு மும்பையில் சொந்த வீடு வாங்கி குடியேறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சூர்யா தற்போது நடிப்பை தாண்டி சொந்த தொழில்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Also read: கேரவன்க்குள்ளே விஜய் நண்பர்களை வச்சு செஞ்ச அஜித்.. பேட்டியில் உண்மையை உடைத்த சஞ்சீவ்

அதன்படி பல பிசினஸ் செய்து வரும் அவர் மும்பை ஏர்போர்ட் பார்க்கிங்கை ஏலம் எடுத்து நல்ல லாபம் பார்த்து வருகிறார். அதை தொடர்ந்து இன்னும் சில பிசினஸ்களிலும் அவர் ஆர்வம் காட்டி கொண்டிருக்கிறார். அதனாலேயே அவர் இப்போது மும்பையில் செட்டிலாகி இருக்கிறாராம். சென்னையில் படப்பிடிப்பு இருக்கும் சமயத்தில் மட்டும் தன் அப்பா வீட்டில் தங்கி படப்பிடிப்பை முடித்து விட்டு உடனே பறந்து விடுகிறாராம்.

இது மட்டுமல்லாமல் அவர் மும்பையில் குடியேறியதற்கு பின்னால் மற்றொரு காரணமும் இருக்கிறது. அதாவது ஜோதிகாவுக்கு சூர்யாவை பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக மாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கேற்றார் போல் சூர்யா தற்போது சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கை தயாரித்து வருகிறார். அதில் ஒரு கேமியா ரோலிலும் அவர் நடிக்கிறார்.

Also read: பத்தே நாட்களில் விஜய்யின் மொத்த வசூலையும் தட்டி தூக்கிய தனுஷ்.. பெரும் கலக்கத்தில் இருக்கும் தளபதி

இதுவே ஜோதிகாவின் பாலிவுட் கனவுக்கான அடித்தளமாக அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் ஹிந்தி திரை உலகில் சூர்யா முத்திரை பதிக்க தேவையான வேலைகளை எல்லாம் பார்த்து வருகிறாராம். ஆனால் இந்த விஷயம் சிவகுமாருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. எப்போதுமே பாரம்பரியம், கூட்டுக் குடும்பம் என வாழ்ந்து வரும் அவருக்கு மூத்த மகனின் காதல், கல்யாணம் கூட அவ்வளவாக பிடித்தம் இல்லாமல் தான் இருந்தது.

ஆனால் சூர்யா தன் காதலில் உறுதியாக இருந்ததால் சிவக்குமார் அவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார். அதை தொடர்ந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது சூர்யா பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடுவது குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் மூத்த மருமகளால் தற்போது சிவக்குமாரின் குடும்பம் ரெண்டு பட்டு போயிருக்கிறது.

Also read: ஹீரோ, ஹீரோயின் இருவருமே இரட்டை வேடங்களில் நடித்த 5 படங்கள்.. ஜோடியாக நடித்த பேரழகன் சூர்யா, ஜோதிகா

Trending News