வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இந்த பிரச்சனையால் தான் சினிமாவிற்கு வந்தேன்.. பலவருட கஷ்டத்தை சொன்ன சூர்யா

அஜித், விஜய் ரசிகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளத்திலும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

நடிகர் சிவகுமாரின் வாரிசாக சூர்யா சினிமாவில் நுழைந்து இருந்தாலும் ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்து உள்ளார். உயரம், நடிப்பு, நடனம் என எல்லாவற்றினாளும் சூர்யா அவமானப்படுத்தபட்டுள்ளார். உனக்கு எதுவுமே வராது என பலர் விமர்சித்துள்ளனர். ஆனால் என்னால் எல்லாமே முடியும் என வெறியோடு சூர்யா மிகப்பெரிய உயரத்தை அடைந்து உள்ளார்.

இந்த விஷயங்களை சமீபத்தில் சூர்யா தெரிவித்துள்ளார். சினிமாவில் வாரிசு நடிகராக இருந்தாலும் எவ்வளவு அவமானங்கள் பட்டுதான் சூர்யா இந்த நிலைமைக்கு வந்துள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஐந்து நிமிட காட்சி என்றாலும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி சென்று உள்ளார் சூர்யா. தற்போது பாலாவுடன் இணைந்து தனது 41 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்த இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கயுள்ளார். சூர்யா சினிமாவில் வந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆனாலும் இதுவரை நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. ஆனால் முதல் முறையாக விக்ரம் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வந்த வில்லனாக மிரட்டி இருந்தார்.

ஆனால் இரும்புக்கை மாயாவி படத்தில் சூர்யா முழுவதுமாக வில்லத்தனமாக தான் நடிப்பார் என லோகேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் சூர்யா பல கஷ்டங்கள் பட்டாலும் இப்போது அதற்கான பலனை அனுபவித்து வருகிறார்.

Trending News