வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இது தான் தோல்விக்கு காரணம், மனசாட்சி வேணும்.. சூர்யாவை தாளிக்கும் நெட்டிசன்கள்

சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கங்குவா’ மோசமான விமர்சனங்களை பெற்றுவருகிறது. குடும்ப ரசிகர்கள் தற்போது கொஞ்சம் ஆதரவு தெரிவித்தாலும், இன்னும் இந்த படத்தை ட்ரோல் செய்யும் மீம் கிரியேட்டர்ஸ் ஓய்ந்த பாடில்லை. ‘இந்தப் படத்தை வாயைப் பிளந்து பார்ப்பார்கள்’ என்று பேசி இருந்தார் சூர்யா. அந்த வார்த்தையை கேட்டப்போதே, இது எதிர்மறையான விமர்சனத்திற்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது என்னவென்றால் ஒரு சில நெட்டிசன்கள், சூர்யாவின் அகம்பாவமும் நன்றி மறந்து அவர் நடந்துகொண்ட நடத்தையும் தான் இந்த படத்தின் தோல்விக்கு காரணம்.. கர்மா யாரையும் சும்மா விடாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சூர்யா செய்த துரோகம்

சூர்யாவின் ஆரம்பகாலத்தில் ஒரு சில முக்கிய இயக்குனர்கள், இவருக்கு கைகொடுத்து தூக்கி விட்டனர். ஆனால் அந்த இயக்குனர்கள் யாரையும் இவர் தற்போது கண்டுகொள்ளவில்லை. இயக்குனர் பாலா, கெளதம் மேனன், ஏ.ஆர். முருகதாஸ், ஹரி போன்ற இயக்குனர்கள் தான் இவருக்கு என்று ஒரு மார்க்கெட்டை ஏற்படுத்தி கொடுத்தனர்.

ஏ.ஆர் முருகதாஸ், கஜினி படத்தை கொடுத்தார். மேலும் 7-ஆம் அறிவு வசூல் ரீதியாக சரிவை சந்தித்தாலும், நல்ல விமர்சனம் பெற்ற படம். பாலா பிதாமகன் படத்தை கொடுத்தார். சூர்யாவின் கேரியரில் அது ஒரு முக்கியமான படம். அடுத்ததாக ஹரி, சிங்கம்-1,2,3 என்று வரிசையாக வெற்றி படம் கொடுத்தார். கெளதம் மேனன், வாரணம் ஆயிரம் என்ற அழகான காதல் படம் கொடுத்தார்.

இதை தொடர்ந்து சுதா கொங்காரா சூரரை போற்று என்ற சூப்பர் ஹிட் படம் கொடுத்தார். ஆனால் சூர்யா இவர்களை எல்லாம் அடியோடு ஒதுக்கிவிட்டார். கெளதம் மேனன் இயக்கி, இன்னும் வெளியாகாமல் இருக்கும், துருவ நட்சத்திரம் படத்தில் முதலில் சூர்யா தான் நடிக்கவிருந்தார். மேலும் பாலா இயக்கிய வணங்கான் படத்தில், சூர்யா நடிக்க மறுத்தார்.

சுதா கொங்காரா இயக்கவிருக்கும், புறநானூறு படத்தில், நடிக்க மாட்டேன் என்று கூறினார் சூர்யா. மேலும் கைதூக்கிவிட்ட, ஹரி, ஏ.ஆர் முருகதாஸ் படங்களில் நடிக்காமலும் தட்டி கழித்தார். இந்த நிலையில், “தரமான படங்களை கொடுக்கும் இயக்குனர்களை எல்லாம் விட்டுவிட்டு, சிறுத்தை சிவாவிடம் தலையை கொடுத்து, அவர் சொன்னதை நம்பி பொம்மலாட்டம் வேற ஆடியிருக்கிறார்.. கர்மா யாரை சும்மா விட்டது..”என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News