வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சார்பட்டா பரம்பரை படத்தை பற்றி புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்.. அதிலும் இந்த கதாபாத்திரம் வேற லெவல்

‘இந்திய சினிமாவுக்கு ஒரு முக்கியமான படம்” என்று சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை இயக்குனர் “சுசீந்திரன்” அவர்கள் பாராட்டு இருக்கிறார். இவ்வாறு அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்ற சார்பட்டா திரைப்படத்தில் “வேம்புலி” என்ற கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் சார்பாக படத்திற்காக 10 ஆண்டுகளுக்கு மேல் பல ஆராய்ச்சிகளை செய்து அதன் பிறகு இப்படம் படமாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. “வேம்புலி” கதாபாத்திரத்தில் நடிகர் “ஜான். கொக்கன்” அவர்கள் நடித்துள்ளார்.

இப்படத்தில் நடித்ததை ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களைப்பற்றிய ரசிகர்கள் பேசும் விதமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மலையாள நடிகரான ஜான் கொக்கன் ஒஸ்தி ,வீரம் ,பாகுபலி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

suseenthiran
suseenthiran

இருப்பினும் சார் திரைப்படத்தில் தான் அவர் மிகவும் பிரபலமாக ரசிகர்களுக்கு தெரிகிறார்.  ஜான் கக்கன் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்த பூஜா ராமச்சந்திரனை திருமணம் செய்து இருக்கிறார்.

பூஜா ராமச்சந்திரன் ஒரு ஆங்கில தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர். அவருடைய இனிமையான பேச்சுக்கு ரசிகர்கள் ஏராளம். இந்நிகழ்ச்சியில் அவருக்கு வரவேற்பு கிடைத்த நிலையில் பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் வந்தது. நண்பன் ,காதலில் சொதப்புவது எப்படி? போன்ற தமிழ் திரைப்படங்களிலும் அதை தொடர்ந்து தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வந்தார் .தொகுப்பாளினியாக இருக்கும் போது தன்னுடன் பணியாற்றிய கிரேக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் நடிகை பூஜா ரவிச்சந்திரன் அவர்களுக்கும் ஜான் அவர்களுக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது.

Trending News