செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

துணிவை தாண்டிய சஸ்பென்ஸ் வாரிசு படத்தில் உள்ளது.. எதிர்பார்ப்பை அதிகரித்த இயக்குனர்

விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் வருகின்ற ஜனவரி 11 தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்த இரு படத்தின் ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் ட்ரைலரின் மூலம் ரசிகர்கள் வாரிசு படத்தை காட்டிலும் துணிவு படத்திற்கு தான் எதிர்பார்ப்பு உள்ளதாக கூறினர்.

அதாவது துணிவு படத்தில் நிறைய ஆக்சன் காட்சிகள் உள்ளது. அதுமட்டுமின்றி அஜித் மோசமான வில்லனாக நடித்துள்ளார். மேலும் டிரைலரை வைத்து பார்க்கும் போது துணிவு படத்தில் ஏகப்பட்ட சஸ்பென்ஸ் உள்ளது. ஆனால் வாரிசு படத்தின் டிரைலர் ஒரு ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படமாக உள்ளது.

Also Read : ட்ரைலரிலேயே மண்ணை கவ்விய வாரிசு.. மீசையை முறுக்கி வரும் அஜித்

மேலும் கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையை விஜய் சரி செய்கிறாரா என்பது தான் படத்தின் கதை என்பதை ட்ரைலர் மூலமே தெரிகிறது. ஆகையால் வாரிசு படத்தில் சஸ்பென்ஸ் இல்லை என கூறப்படுகிறது. ஆனால் துணிவு படத்தைப் போல வாரிசு படத்திலும் சஸ்பென்ஸ் நிறைந்து இருப்பதாக வம்சி கூறியுள்ளார்.

இதை வைத்துப் பார்க்கும்போது வாரிசு படத்தில் குஷ்பூ, எஸ்ஜே சூர்யா என்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள். அவர்களை ட்ரைலரில் பார்க்க முடியவில்லை. எனவே இவர்களின் கதாபாத்திரம் சஸ்பென்ஸ் நிறைந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதை வாரிசு படக்குழுவும் உறுதி செய்துள்ளது.

Also Read : நாங்க என்ன கேனப்பயலா? வாரிசு விஜய்யை சீண்டிய பயில்வான்

மேலும் ட்ரெய்லரில் எஸ்ஜேசூர்யா இடம்பெறாததால் அவர் இந்த படத்தில் நடித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் விஜய்க்கு எதிராக ஆக்ரோஷமாக பேசும் வசனங்கள் வயதான பிரகாஷ்ராஜுக்கு எடுபடவில்லை. ஆகையால் ஒருவேளை பிரகாஷ்ராஜின் மகனாக எஸ் ஜே சூர்யா இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தற்போது ஒரு செய்தி பரவி வருகிறது.

வாரிசு படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் வேற லெவலில் வம்சி எடுத்துள்ளாராம். தியேட்டரில் இருந்து படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் கண்ணீருடன் தான் வருவார்கள் என உறுதியாக கூறுகிறார்கள். அந்த அளவுக்கு உருக்கமான காட்சிகளை வம்சி பார்த்து பார்த்து செதுக்கிய உள்ளாராம்.

இதனால் வாரிசு படம் இப்போதே வெற்றி படம் என்று விஜய் ரசிகர்கள் பேசி வருகிறார்கள். மேலும் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் இணையத்தில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. அதேபோல் வாரிசு படத்தின் ட்ரைலரையும் ட்ரோல் செய்து வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் வாரிசு படம் சரியான பதிலடி கொடுக்க உள்ளது.

Also Read : தாறுமாறாக எகிறிய வாரிசு-வின் டிக்கெட் விலை.. ஒரு பாப்கார்ன், ஒரு கொக்ககோலா ஃப்ரீ என விளம்பரம் வேற

Trending News