வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பாண்டியனின் மருமகள் மீது மீனாவுக்கு வந்த சந்தேகம்.. 5 விஷயங்களை மறைத்து கல்யாணம் பண்ணிய தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியனைப் பொறுத்தவரை தன் பேச்சைக் கேட்டு சரவணன் வீட்டில் பார்க்கும் பெண்ணே கல்யாணம் பண்ணினதால் சரவணன் மற்றும் தங்கமயில் தான் ஒசத்தி என்கிற மாதிரி ஓவராக பெருமை பேசிக்கொள்வார். ஆனால் மீனா மற்றும் ராஜி வந்த பிறகுதான் பாண்டியன் குடும்பமே கலைகட்டி சந்தோசமாக இருக்கிறார்கள்.

அதிலும் ராஜி மீனாவின் ஒற்றுமை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. இருந்தபோதிலும் தங்கமயில் எந்த ஒரு சின்ன விஷயத்தை பண்ணினாலும் அதை பெருமையாக பேசி தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதே பாண்டியனின் வேலையாக இருக்கிறது. ஆனால் வீட்டுக்கு வந்த தங்கமயில் எத்தனை பொய்யும் பித்தலாட்டமும் பண்ணி மருமகளாக வந்திருக்கிறார் என்பது பாண்டியனுக்கு தெரியவில்லை.

வயசையும் மறைத்து சரவணன் தலையில் மிளகாய் அரைத்த தங்கமயில்

அது தெரியாமல் சரவணன் மற்றும் தங்கமயில் கல்யாணத்தை முறைப்படி பதிவு பண்ண வேண்டும் என்பதற்காக வீட்டிற்கு வந்த பாண்டியன் தங்கமயிலின் ஆதார அட்டையை கேட்கிறார். இதை கேட்டதும் தங்கமயில் திருட்டு முழி முழிக்கிறார். அதன் பிறகு தான் தெரியுது வயசு வித்தியாசத்தில் பொய் சொல்லி கல்யாணம் பண்ணி இருக்கிறார் என்று.

அதாவது சரவணன் விட வயசு மூத்தவர் தான் இந்த தங்கமயில். இந்த விஷயத்தை மட்டும் மறைத்தது இல்லாமல் இன்னும் சில விஷயங்களை மறைத்து தான் கல்யாணம் பண்ணி இருக்கிறார்கள். டபுள் டிகிரி படித்த பெண் என்று பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறார். அத்துடன் போட்ட நகை அனைத்தும் கவரிங் நகை என்பதை தெரியாத அளவிற்கு பித்தலாட்டம் பண்ணியிருக்கிறார்.

போதாதருக்கு அப்பா அம்மா எந்த வேலையும் பார்க்காமல் வெட்டியாக தான் வீட்டில் இருக்கிறார்கள். ஆனால் தங்கமயில் அப்பா எதோ பிசினஸ் பண்ணுகிறார் பெருத்த லாபத்தை சம்பாதித்து வருகிறார் என்பதற்கு ஏற்ப பொய் சொல்லி இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் வீட்டை சுற்றி நிறைய கடன் வாங்கி அதை கொடுக்க முடியாமல் பக்கத்தில் இருப்பவர்களிடம் சண்டை போட்டு அடாவடித்தனமும் செய்து வருகிறார்கள்.

ஜாதகமே பொருத்தம் இல்லாமல் பொருத்தம் இருக்கிறது என்று பொய் சொல்லி தங்கமயில் அம்மா ஏமாற்றி கல்யாணம் பண்ணி வைத்திருக்கிறார். இப்படி பல பொய்களையும் பித்தலாட்டங்களின் பண்ணி மருமகளாக பாண்டியன் வீட்டிற்கு நுழைந்த தங்கமயில் எந்த ஒரு விஷயத்திலும் மாட்டாமல் பாண்டியன் பெருமை பேசும் மருமகளாக வாழ்ந்து வருகிறார்.

தற்போது ஆதார் விஷயத்தில் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தங்கமயில் ஆதார் அட்டை என்னுடைய அம்மா வீட்டில் இருக்கிறது என்று பதட்டத்துடன் பொய் சொல்கிறார். இதை பார்த்த மீனா, ஏதோ தப்பாக தெரிகிறது. தங்கமயில் அக்கா எதையோ மறைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்கிறார். ஆனாலும் மீனா என்ன சொன்னாலும் இந்த அந்த வீட்டில் புரோஜனம் இல்லை யாரும் கேட்கவும் மாட்டார்கள்.

அதனால் ஏற்பட்ட சந்தேகத்தை மறுபடியும் செந்தில் இடம் சொல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால் செந்திலும் இதை காது கொடுத்து கேட்க மாட்டார். கடைசியில் ராஜிடம் சொல்லப் போதுதான் ராஜி, மீனா சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கும் என்ற அர்த்தத்தை புரிந்து கொண்டு தங்கமயில் பற்றிய விஷயங்களை சேர்ந்து கண்டுபிடிக்க போகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News