புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரோகினி பையன் மூலம் முத்துக்கு வரும் சந்தேகம் .. மகனுக்காக மனோஜ் பணத்தை செலவழிக்கும் கல்யாணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி உண்மையிலேயே பணக்கார பொண்ணு என்கிற நினைப்பில் விஜயா குடும்பத்தில் ஓவராக ஆட்டம் ஆடுகிறார். அதிலும் இப்பொழுது மனோஜ் ஒரு பிசினஸ் பண்ணி தொழிலதிபராக மாறிவிட்டதால் புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருமே கெத்தோடு அலைகிறார்கள்.

மீனாவிற்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தும் விஜயா மனசாட்சி இல்லாமல் மீனாவை குறை சொல்லி குடும்பத்தை அவமானப்படுத்தும் விதமாக நோகடித்து விட்டார். இதை எல்லாம் பார்த்த ரோகினி வாயை மூடிக்கொண்டு சந்தோஷத்தில் குளிர் காய்கிறார். அத்துடன் ரோகினிடம் உனக்கு இருக்கும் பெருந்தன்மை வேறு யாருக்கும் இருக்காது.

கையும் களவுமாய் மாட்டப் போகும் ரோகினி

அதிலும் இங்கிருக்க சிலருக்கு இந்த வீட்டில் இருந்து ஏதாவது எடுத்துட்டு போய் பிறந்த வீட்டுக்கு கொடுக்கனும் என்று தான் அலைகிறார்கள் என்று மீனாவை ஜாடமாடையாக பேசுகிறார். இதனைக் கேட்ட சுருதி, நீங்கள் யாரை இப்படி பேசுகிறீர்கள் என்று எனக்கு தெரியும். மீனாவை பற்றி அப்படியெல்லாம் பேசாதீர்கள். எனக்கு அவங்களைப் பற்றி நன்றாக தெரியும்.

ஏன் எப்ப பார்த்தாலும் அவர்களை திட்டிக்கிட்டே இருக்கீங்க என்று மீனாவுக்கு ஆதரவாக விஜயாவிடம் சண்டை போடுகிறார். பிறகு விஜயா, சுருதியிடம் நான் மீனாவை பற்றி பேசவில்லை. பொதுவாக தான் சொல்கிறேன் என்று பேசி மலுப்புகிறார். இதனை தொடர்ந்து மீனா சோர்வாக இருப்பதால் காலையில் யாருக்கும் சமைக்க முடியாமல் போய்விட்டது.

அதற்கும் விஜயா, மீனாவை திட்டி உன்னால அவங்க நாலு பேரும் சாப்பிடாம போயிட்டாங்க என்று சண்டை போடுகிறார். உடனே முத்து இனி அவர்களுக்கு தேவையானது அவர்களை சமைச்சு சாப்பிடட்டும். மீனா யாருக்கும் சமைக்க மாட்டாள் என்று சொல்கிறார். ஆனால் அடுத்த நொடியிலேயே மீனா வேலைக்காரி போல் அடுப்பாங்கரையில் போய் அனைத்து பாத்திரங்களையும் தேய்த்து கழுவுகிறார்.

இந்த மீனா இப்படி இருக்கும் வரை முத்துவுக்கு மதிப்பும் வராது மரியாதையும் கிடைக்காது. விஜயாவும் ஓவராக ஆடிக்கொண்டு தான் வருவார். இதனை தொடர்ந்து ரோகிணி ஷோரூம் இல் இருக்கும் பொழுது ரோகினி அம்மா போன் பண்ணி கிருஷ்க்கு உடம்பு சரியில்லை என்ற விஷயத்தை சொல்கிறார்.

இதைக் கேட்டு பதறி போய் மருத்துவமனைக்கு ரோகிணி போகிறார். ஆனால் அதே நேரத்தில் மீனாவிற்கு உடம்பு சரியில்லை என்பதால் மருத்துவமனைக்கு முத்து கூட்டிட்டு வருகிறார். அப்பொழுது இருவரும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. உடனே முத்துவிடம் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக ரோகினி தட்டு தடுமாறி பொய் சொல்கிறார்.

ஆனாலும் முத்துவிற்கு ரோகிணி மீது சந்தேகம் வந்துவிட்டது. இப்போது இந்த சந்தேகத்தின் ஆரம்பமாக ரோகிணி பற்றி விஷயங்களை தெரிந்து கொள்வதற்காக முத்து முயற்சி எடுக்கப் போகிறார். அதன் மூலம் கூடிய விரைவில் ரோகிணி பற்றி உண்மைகள் வெளிவர வாய்ப்பு இருக்கிறது. அடுத்ததாக கிரிஸ்க்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி நிலையில் மருத்துவமனை செலவுக்கு மனோஜ் வைத்திருந்த பணத்தை ரோகினி செலவழித்து காப்பாற்ற போகிறார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலின் சுவாரசியமான சம்பவங்கள்

Trending News