வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

ஆசை பட சுவலட்சுமியை ஞாபகம் உள்ளதா? கணவருடன் வைரலாகும் புகைப்படம்

80 மற்றும் 90களில் நடித்த பல நடிகைகள் பார்த்தவுடன் மனதை கொள்ளை கொள்ளும் அழகில் இருந்தார்கள். அந்த வரிசையில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகை என்றால் அது நடிகை சுவலட்சுமி தான். இவரது அழகும், குழந்தை தனமான சிரிப்பும், நடிப்பு திறமையும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று.

கடந்த 1995 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஆசை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை சுவலட்சுமி. முதல் படமே தல படம் என்பதால் அடுத்தடுத்து இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தது. இவரது முகம் பார்ப்பதற்கு ஹோம்லியாக இருப்பதால் பெரும்பாலும் குடும்பப்பாங்கான கதைகளே இவரைத் தேடி வந்தது.

பின்னர் விஜயுடன் சேர்ந்து லவ் டுடே, நிலாவே வா போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். அதிகமாக குடும்ப பாங்கான பெண்ணாக நடித்தது, மற்ற நடிகைகளை போல முகம் சுளிக்கவைக்கும் உடைகளை அணியாதது போன்ற காரணங்களால் ஆண்கள் மட்டுமின்றி பல பெண் ரசிகைகளையும் சுவலட்சுமி தன் கைவசம் வைத்திருந்தார்.

suvaluxmi
suvaluxmi

இவர் தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, வங்க மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழல் கடைசியாக நதி கரையினிலே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்நாடு மாநில அரசின் விருதை வென்றார். பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான சூலம் என்ற சீரியலில் நடித்து பல குடும்ப பெண்களையும் கவர்ந்தார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர் ஸ்வகாடோ பானர்ஜி என்பவரை திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையை தொடங்கிய சுவலட்சுமி தற்போது சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வருகிறார். மேலும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பல்கலைக்கழக அகாடமியியில் 2013ஆம் ஆண்டு இல்லஸ்ட்ரேஷனில் முதுநிலை நுண்கலைகளில் பட்டம் பெற்றார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இயக்குனர் ராஜா அவரை அணுகிய போதும் அவர் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதன் பின்னரே அந்த கதாபாத்திரத்தில் நடிகை கெளசல்யா நடித்தார். இந்நிலையில் தற்போது சுவலட்சுமி தன் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News