வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பணத்தாசை பிடித்த டி ராஜேந்தர்.. இப்படியே போயிட்டு இருந்தா சிம்புவோட கேரியர் க்ளோஸ்

தமிழ் சினிமாவில் தனது அடுக்கு மொழி பேச்சால் பிரபலமாக இருப்பவர் இயக்குனர் டி ராஜேந்தர். அவர் இயக்கம் மட்டுமின்றி வசனம், இசை போன்ற அனைத்து துறைகளிலும் வல்லவர். தற்போது அவருடைய இரண்டு மகன்களும் சினிமா துறையில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர் அதிலும் அவருடைய மூத்த மகன் சிலம்பரசன் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உள்ளார்.

தன் தந்தையின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். டி ராஜேந்தர் தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் போதே லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அறிமுகப்படுத்தி பரபரப்பை கிளப்பினார். அதன் பிறகு சிம்பு நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருடைய குடும்பத்தின் தலையீடு அதிகமாக இருந்தது.

அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்லலாம். தமிழ் திரையுலகில் முக்கிய தயாரிப்பாளராக இருப்பவர் கலைப்புலி தாணு. அவர் சிம்புவை வைத்து தொட்டி ஜெயா என்னும் படத்தை தயாரித்தார். இந்த படம் பாதி முடிவடைந்த நிலையில் டி ராஜேந்தர் மற்றும் அவரது மனைவி உஷா ராஜேந்தர் தயாரிப்பாளரிடம் பிரச்சனை செய்திருக்கிறார்கள்.

அதாவது சிம்புவிற்கு ஏற்கனவே பேசப்பட்ட சம்பளம் போதாது என்றும், இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளரை தொந்தரவு செய்திருக்கிறார்கள். அதற்கு தாணு சிம்புதான் என்னிடம் வந்து இந்தப் படத்தைப் பற்றி கேட்டார். மேலும் அவரே ஹீரோயின் கோபிகாவையும் செலக்ட் செய்து, தன்னுடைய சம்பளத்தையும் பேசி முடித்தார் என்று கூறியுள்ளார்.

ஆனாலும் அவர் சொன்னதை கேட்காத சிம்புவின் குடும்பம் சம்பளம் அதிகமாக வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். படம் பாதி முடிந்துவிட்டது இப்போது என்ன செய்வது என்று நொந்து கொண்டு தயாரிப்பாளர் தாணுவும் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து நாகரீகமாக நடந்து கொண்டார்.

டி ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் இருவரும் சின்னதாக ஒரு பிரச்சினை ஏற்பட்டால் போதும் உடனே பிரஸ்மீட் வைத்து சம்பந்தப்பட்ட நபரை கிழி கிழி என்று கிழித்து விடுவார்கள். அப்படி பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இப்போது மாநாடு 108 கோடி ரூபாய் வசூலித்தது என்றால் சும்மாவா இருப்பார்கள்.

இதன் காரணமாகவே டி ராஜேந்தர் மாநாடு திரைப்பட தயாரிப்பாளர் மீது சாட்டிலைட் உரிமையை காரணம் காட்டி தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு தற்போது பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிம்பு மாநாடு படத்தின் வெற்றி விழாவுக்கு வராததும் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படியே சென்றால் சிம்புவின் சினிமா பயணம் அவரது அப்பாவால் கேள்விக்குறியாகும் நிலைக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை.

Trending News