வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

நடிகையால் தடைப்பட்ட சிம்புவின் திருமணம்.. வதந்தியால் வந்த வேதனை

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தன் பயணத்தை ஆரம்பித்து இன்று முன்னணி ஹீரோ பட்டியலில் இடம்பிடித்துள்ளார் நடிகர் சிம்பு. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் பல கோடி வரை வசூல் சாதனை படைத்தது.

இதை தொடர்ந்து தற்போது சிம்பு ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். சிம்புவின் வாழ்வில் ஏற்பட்ட இரண்டு காதல் தோல்விகளுக்கு பிறகு இப்போது அவர் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ஈஸ்வரன் என்ற திரைப்படம் வெளியானது.

அப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் ஓரளவுக்கு ரசிகர்களை கவர்ந்தது. அதில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நிதி அகர்வால். இவர் மதுபான விளம்பரம் மற்றும் பட விழாக்களுக்கு ஓவர் கிளாமராக உடை அணிந்து வருவது என்று பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளார்.

தற்போது இவருக்கும் நடிகர் சிம்புவுக்கும் காதல் தீ பற்றிக் கொண்டதாக கோடம்பாக்கம் முழுவதும் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல்களால் சிம்புவின் குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் பாரம்பரியத்தை பின்பற்ற கூடியவர். அவருடைய இரண்டாவது மகன் குறளரசனுக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையில், சிம்புவிற்கு ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என்று பலரும் கேட்டு வந்தனர்.

இந்நிலையில் ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் இருவரும் சிம்புவுக்கு பெங்களூரில் ஒரு பெண்ணை பார்த்து திருமணத்தை முடிவு செய்துள்ளனர். அனைத்து விஷயங்களும் பேசப்பட்டு நிச்சயதார்த்தம் விரைவில் நடப்பதாக இருந்தது.

ஆனால் சிம்பு குறித்து வந்த இந்த வதந்தியால் பெண் வீட்டார் தற்போது திருமணத்தை நடத்த வேண்டுமா என்று யோசிக்கிறார்கள். சிம்புவுக்கு எப்படியாவது திருமணத்தை நடத்தி முடித்து விட வேண்டும் என்று இருந்தா டி ஆர் குடும்பத்தினர் தற்போது மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர்.

Trending News