திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

10 வருடம் ரிலேஷன்ஷிப்பில் இருந்த டாப்ஸி.. பிரபல வீரருடன் விரைவில் திருமணம்

Actress Tapsee : வெள்ளாவி வச்சுத்தான் வெறுத்தாங்களா என்ற பாடலுக்கு பொருத்தமான ஆள் தான் டாப்ஸி. தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அதோடு மற்ற மொழி படங்களிலும் டாப்ஸிக்கு வாய்ப்பு கிடைத்து வந்தது.

குறிப்பாக பாலிவுட்டில் டாப்ஸிக்கு பட வாய்ப்புகள் எக்கச்சக்கம் குவிந்து வருகிறது. இந்நிலையில் 35 வயதாகும் டாப்ஸி விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார். அதுவும் பிரபல விளையாட்டு வீரருடன் அவருக்கு திருமணம் நடக்க உள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

பேட்மிட்டன் வீரர் மதியாஷ் போவ் என்பவரை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக டாப்ஸி காதலித்து வந்துள்ளார். இவருடன் தான் டாப்ஸிக்கு வருகின்ற மார்ச் மாதம் திருமணம் நடக்க உள்ளதாம். ராஜஸ்தானில் உள்ள உட்பூரில் இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

Also Read : ஹீரோக்களுக்கு இணையாக சிக்ஸ் பேக்ஸ் வைத்த ஆடுகளம் நடிகை.. வைரலாகும் டாப்ஸி புகைப்படம்

அதோடு சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி டாப்ஸி மற்றும் மதியாஷ் யோவ் திருமணம் நடக்க உள்ளது. இந்த திருமண நிகழ்வில் இவர்கள் இரு குடும்ப உறவினர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். அதன் பிறகு ரிசப்ஷன் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட உள்ள நிலையில் அதில் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

மேலும் டாப்ஸிக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ள செய்தியை கேட்டு அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் டாப்ஸி கடைசியாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான டன்கி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : கூட்டாளி சம்பளத்தை கேட்டு வயித்தெரிச்சலில் 5 நடிகர்கள்.. குடிக்க மட்டுமில்ல குளிப்பதற்கும் பன்னீர் கேட்கும் தனுஷ்

Trending News