தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் பாரதிராஜாவின் இயக்கத்தில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி மோசமான தோல்வியை சந்தித்த திரைப்படம் தான் தாஜ் மஹால். பாடல்கள் வெற்றியடைந்த அளவுக்கு படம் வெற்றி பெறவில்லை.
பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி நடிப்பில் வெளிவந்த தாஜ்மஹால் படம் ஏன் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பதற்கு கோலிவுட் வட்டாரங்களில் ஒரு சில காரணங்கள் சொல்லப்படுகிறது. அவைகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
அதில் முதல் காரணமாக சொல்லப்படுவது, தாஜ்மஹால் திரைப்படம் முதன்முதலில் நகரத்தை மையப்படுத்தி எழுதப்பட்டதாகவும், அதன் பிறகு நமக்கு கிராமத்து கதை களம் தான் சரி என கதையை மட்டும் வைத்து திரைக்கதையை பாரதிராஜா மாற்றி அமைத்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மற்றொரு காரணமாக பார்க்கப்படுவது திரைக்கதையில் கொஞ்சம் கூட ஒரு நிலைத்தன்மை இல்லாததும், அங்கங்கே பிச்சு பிச்சு ஒட்ட வைத்தது போலவும் இருந்ததாம்.
அதுமட்டுமில்லாமல் இந்த படம் என்ன கருத்தை சொல்ல வருகிறது என்பதும் பலருக்கும் புரியாமல் போய்விட்டது என்ற ஒரு கருத்தும் அப்போதைய பத்திரிக்கைகளில் எழுதப்பட்டன.
மேலும் தமிழ் படமா, தெலுங்கு படமா அல்லது ஹிந்தி படமா? என்ற எந்த தனித்துவமும் இல்லாமல் போனதும் படத்தின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாகவும் அமைந்தது என டூரிங் டாக்கிஸ் பிரபலம் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். தன் மகனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டுமென மெனக்கெட்டு அந்த படத்தை கெடுத்ததாக பாரதிராஜாவின் மீது ஒரு பழிச்சொல் உள்ளது.