திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Takkar Movie Review- பணக்காரராக ஆசைப்பட்ட சித்தார்த்தின் பாதை மாறிய பயணம்.. டக்கர் படத்தின் முழு விமர்சனம் இதோ!

Takkar Movie Review: பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் ஹீரோவாகவும், திவ்யான்ஷா ஹீரோயினாக நடித்த டக்கர் திரைப்படம் இன்று உலகெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இதில் யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் உள்ளிட்டோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்போது இந்த படத்தின் திரைக்கதை விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.

பணக்காரராக ஆசைப்பட்ட மிடில் கிளாஸ் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்திருப்பார். இவர் ரெஸ்டாரன்ட், பார், ஜிம் என பல வேலைகளை பார்த்து பணக்காரனாக வேண்டும் என வெறியுடன் செயல்படுகிறார். ஆனால் அவருடைய தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் பார்க்கும் வேலைகளில் நிலைத்து நிற்க முடியவில்லை.

Also Read: சித்தார்த் நடித்துள்ள படம் டக்கரா இல்ல டுபாக்கூரா.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

கடைசியில் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு பென்ஸ் கார் ஒன்றுக்கு டிரைவராக பணிபுரிகிறார். அப்போது சென்னையில் போதைப்பொருள், ஆள் கடத்தல், ரவுடிசம் ஆகிய ஒட்டுமொத்த கேடித்தனமும் நிரம்பி இருக்கும் இடத்திற்கு கார் ஒன்றை எடுத்துச் செல்ல வருகிறார். அந்த காருக்குள் கடத்தப்பட்ட பணக்கார பெண்ணான ஹீரோயின் இருக்கிறார்.

அவர்களுக்குள் என்ன நடக்கிறது? பணக்காரராக ஆசைப்பட்ட சித்தார்த்தின் லட்சியம் நிறைவேறுகிறதா? என்பதே
இந்த படத்தின் கதை. இதில் ஹீரோ, ஹீரோயின், வில்லன் குரூப் என ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்துவதற்குள்ளேயே பாதி படம் முடிந்து விடுகிறது. முதல் பாதி இரண்டாம் பாதியை ஒப்பிடுகையில் பரவாயில்லை.

Also Raed: சித்தார்த்தின் டக்கரான நடிப்பில் வெளிவர உள்ள 5 படங்கள்.. கமலுடன் போட்ட மாஸ் கூட்டணி

இதில் வில்லன் கூட்டத்தில் இருக்கும் யோகி பாபுவின் நகைச்சுவை மற்றும் படத்தின் சில பாடல்கள் மட்டுமே படத்தைப் பார்ப்போருக்கு ஒரு ஆறுதலாக அமைந்துள்ளது. நீண்ட இடைகளுக்குப் பிறகு கம்பேக் கொடுத்த சித்தார்த்திற்கு இந்த படம் கொஞ்சம் சொதப்பிவிட்டது. ஏழை பணக்கார வர்க்கத்தை வேறுபடுத்திக் காட்டக் கூடிய தமிழ் படங்கள் எத்தனையோ வெளிவந்தாலும், அதில் வெகு சில படங்கள் மட்டுமே வென்றது. அதில் டக்கரும் இடம்பெருமா என்பது டவுட்டுதான்.

அதே சமயம் சித்தார்த் நடிக்க தேர்வு செய்யும் படங்கள் எல்லாம் பலசாக இருக்கிறதா! இல்லை அவர் ஒரு படத்தை எடுப்பதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்வதால் அது பலசாகி விடுகிறதா! என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்
ஆக மொத்தத்தில் டக்கர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு டக்கராக இல்லை டுபாகூராக தான் இருக்கிறது.

சினிமா பேட்டை ரேட்டிங் – 2.75/5

Also Read: விவாகரத்துக்கு பின் மறுமணம் பற்றி யோசிக்காத 6 நடிகர்கள்.. டேட்டிங் உறவில் சித்தார்த் செய்யும் அட்டூழியம்

Trending News