ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

சோகமாக முடிந்த தலைசிறந்த 5 கிரிக்கெட் வீரர்களின் கிரிக்கெட் பயணம்

ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் ரிட்டயர்மென்ட் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. முடிந்தவரை சிறப்பாக தங்களது அணிக்காக விளையாடி விட்டு ஓய்வு முடிவை எடுக்க தான் அனைத்து வீரர்களும் விரும்புவார்கள். அப்படி இருக்கையில் எதிர்பாராத விதமாக சில கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய பயணத்தை மிக சோகமாக முடித்துக் கொண்டுள்ளனர்.

1. நவ்ஜோத் சிங் சித்து: சித்து ஒரு ஆக்ரோஷமான ஆட்டக்காரர். இவரைப் பற்றி நிறைய கட்டுக் கதைகளை கூறி வருவார்கள். அனைத்து வீரர்களிடமும் மிகவும் சகஜமாக பழகக்கூடியவர் சித்து. அப்பொழுது இந்திய அணியின் கேப்டனாக இருந்த முகமது அசாருதீன், “உலக கோப்பை தொடரில் விளையாடும் அளவிற்கு சித்து பொருத்தமானவராக தற்போது இல்லை” என பத்திரிக்கை ஒன்றில் கூறிவிட்டார். இதனை மனதில் வைத்துக் கொண்டு சித்து தனது ஓய்வு முடிவை அறிவித்து விட்டார். இது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

2. ஜேம்ஸ் டெய்லர் : இங்கிலாந்து அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிய வீரர்களில் ஜேம்ஸ் டெய்லர் ஒருவர். இவர் தனது 26ஆவது வயதில் தனது ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்தார். இவருக்கு இதயத்தில்  சிறிய பிரச்சினை ஏற்பட்ட காரணத்தினால் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை இவர் முடித்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்.

3. ஹென்றி உலாங்கோ: ஜிம்பாவே அணியின் வேகப்பந்து வீச்சாளர் இவர். ஒருமுறை இந்திய அணியின் சச்சினிடம் வாலாட்டி அதற்கு தகுந்த பலனை பெற்றார். 2003 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் விளையாடி கொண்டிருக்கும் போது தனது கையில் கருப்பு பட்டை அணிந்து கொண்டார். தனது நாட்டின் ஜனநாயகம் சரியாக இல்லாத காரணத்தினால் அதைப் பிரதிபலிக்கும் வண்ணம் கருப்பு என அதனை அணிந்து கொண்டார். இது அந்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இவரை கைது செய்யும் அளவிற்கு சென்றது. அதன்பின் கிரிக்கெட் வாழ்க்கையும் இவருக்கு முடிவிற்கு வந்தது.

4. மார்க் பவுச்சர்: தென்ஆப்பிரிக்க அணியின் தலைசிறந்த கீப்பர் என்று இவரைக் கூறலாம். ஒரு போட்டியில் இம்ரான் தாகிர் வீசிய பந்து இவரது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்தது. அவர் வீசிய பந்து ஸ்டெம்பை பதம் பார்த்து அதன் மேலிருந்த பைல்ஸ் இவரது கண்ணை கிழித்தது. அதன் காரணமாக இவரால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியாமல் போனது.

5. விவிஎஸ் லக்ஷ்மன்: இந்திய டெஸ்ட் அணியின் அசைக்க முடியாத ஒரு வீரர் லட்சுமன். இவர் ஒருமுறை ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் சரியாக விளையாடாத காரணத்தினால் இவரை பெரிதும் விமர்சித்தனர். இவருக்கு இந்திய அணியில் விளையாடும் காலம் முடிந்துவிட்டது என்று வெளிப்படையாக விமர்சித்தனர். இதனை மனதில் வைத்துக் கொண்டவிவிஎஸ் லக்ஷ்மன் தனது ஓய்வை அறிவித்தார்.

vvs laxman
vvs laxman
- Advertisement -spot_img

Trending News