வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

புறநானூறு படத்துக்கு வரப்போகுது டாக் ஆப் தி டவுன் செய்தி.. சுதா கொங்காராவிற்கு குட் பை போட்ட நிவின் பாலி

சுதா கொங்காராவின் புறநானூறு படத்தை சூர்யா கைவிட்டதால் அந்த கதைக்கு சிவகார்த்திகேயன் பச்சை கொடி காட்டி இருக்கிறார். படத்தின் டைட்டிலை மட்டும் மாற்றிவிட்டு அதே கதையை சிவாவை வைத்து எடுக்க திட்டம் போட்டு விட்டனர் முழு கதையையும் ரெடி பண்ணி விட்டார் சுதா.

அமரன் படத்திற்கு பின்னர் சிவகார்த்திகேயன் அடுத்து ஏ ஆர் முருகதாஸ் படத்தை முடித்த பின் புறநானூறு படத்தில் இணைகிறார். சுதா கொங்காரா இந்த படத்திற்கு நீண்ட நாட்களாக ஆர்டிஸ்ட் தேடும் வேளையில் இறங்கி இருந்தார். எல்லா கதாபாத்திரமும் ரெடியாகவே, வில்லன் கேரக்டர் மற்றும் இழுத்துக் கொண்டே போனது.

முதலில் இந்த படத்திற்கு வில்லனாக இயக்குனர் லோகேஷ் கனகராஜை நடிக்க திட்டமிட்டு இருந்தார் ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, வில்லன் கேரக்டருக்காக படாத பாடுபட்டார் சுதா கோங்காரா. அதன் பின் மலையாள நடிகர் நிவின் பாலியை இதில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார்.

இப்பொழுது நடிகர் நிவின்பாலியும் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் வேற்று மொழியில் வில்லன் நடிகரை தேர்ந்தெடுப்பதை கைவிட்டு, தமிழ் நடிகரையே தேர்ந்தெடுத்துள்ளார். இதுவரை அவர் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்ததே இல்லையாம். இந்த செய்தி வெளிவரும் பொழுது அனைவரும் மிகவும் ஆச்சிரியமடைந்து பேசுவார்கள் எனவும் கூறி வருகிறார்.

புறநானூறு படத்தை டிசம்பர் மாதம் எடுக்க திட்டமிட்டு வருகிறார். அதற்குள் ஏ ஆர் முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் வரவேண்டும்,. மற்ற ஆர்டிஸ்ட் அனைவரும் வருகிற டிசம்பர் மாதம் இந்த படத்தில் இணைய உள்ளனர். ஏற்கனவே ஹிந்தி எதிர்ப்பு சம்பந்தப்பட்ட படம் என்பதால் இந்த கதையில் நடிக்க சூர்யா மறுப்பு தெரிவித்து விட்டார்.

- Advertisement -

Trending News