வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஜெயிலரை போல 4 மேடையை அலறவிட்ட தளபதி பற்றிய பேச்சு.. வாய் கூசாமல் வாய்ப்புக்கு பிட்டை போட்ட அட்லி

Actor Vijay:அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பட்டம் கடந்த சில வருடங்களாக கோலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. அதன் தாக்கத்தால் தொடர்ந்து புதிய படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் சரி, இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளிலும் இதைப் பற்றி தான் பிரபலங்களும் மேடைகளில் பேசி எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அதிலும் சமீபத்தில் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியின் போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான கலாநிதி மாறன் சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினிக்கு மட்டும்தான். 72 வயதிலும் தயாரிப்பாளர்கள் அவர்களுடைய படங்களில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் என வீட்டு வாசலில் வரிசை கட்டி காக்கின்றனர். அப்படி இருக்கும் போது இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும்தான் என ஆவேசத்துடன் பேசினார்.

Also Read: 17 வருஷத்திற்கு பிறகு மறுபடியும் ரிப்பீட்டு.. வெளியானது சந்திரமுகி 2 ட்ரெய்லர்

இதில் மட்டுமல்ல பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியிலும் தளபதியை தான் பேசும் பொருளாக்கினர். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் 80 கோடி வசூலை வாரி குவித்த மாவீரன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியிலும், எதற்காக இந்த நடத்துகிறோம் என்பதே தெரியாமல் விஜய்யை பற்றி தான் எல்லா பிரபலங்களும் வரிசையாக பேசினார்கள்.

இப்போது கூட அட்லி- ஷாருக்கான் கூட்டணியில் உருவாகியிருக்கும் ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. அதில் அட்லி மேடையில் மைக்கை கையில் வாங்கியவுடன் அவர் நன்றி சொன்னது முதலில் விஜய்க்கு தான். ராஜா ராணி படத்திற்கு பிறகு பிகில், தெறி, மெர்சல் போன்ற 3 ஹிட் படங்களை கொடுத்த அட்லி, தனக்கென ஒரு கம்போர்ட் சோனில் இருக்கிறார். ஆனால் அதை உடைத்து பாலிவுட் பட வாய்ப்பு வந்ததும், ‘இதை நீ கண்டிப்பாக செய்ய வேண்டும்’ என விஜய் அழுத்தி சொன்னதால் மட்டுமே ஜவான் படத்தை எந்தவித தயக்கமும் இல்லாமல் கையில் எடுத்ததாக தளபதி பற்றி பூரிப்புடன் பேசினார். அதே சமயம் அந்த மேடையை பயன்படுத்தி அட்லி சைட் கேப்பில் விஜய் இடம் வாய்ப்பு கேட்டிருப்பது அப்பட்டமாக தெரிந்தது.

Also Read: போதையில் கதை கேட்கும் நடிகர்.. கூட நின்று போட்டோ எடுக்க ஆசைப்பட்ட சிவகார்த்திகேயன்

இதன் தொடர்ச்சியாக இப்போது சந்திரமுகி 2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸும் விஜய்யை பற்றி பேசி இருக்கிறார். ‘சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டும் என்று விஜய் கேட்டாரா? இல்லை என்றால் ஏதாவது அறிவிப்பையாவது விட்டாரா? அப்படி இருக்கும்போது எதற்காக உங்களுக்குள் அடித்துக் கொள்கிறீர்கள். நான் ஒவ்வொரு முறையும் விஜய்யை சந்தித்த போதெல்லாம் தலைவர் எப்படி இருக்கிறார்? அவருடைய உடல்நிலை எப்படி இருக்கிறது? என்று தளபதி தவறாமல் கேட்பார்.

அதே போலவே சூப்பர் ஸ்டாரும் விஜய்யின் பீஸ்ட் படத்தை பற்றி நிறைய பேர் படம் பிளாப் என்று சொன்னாலும் கூட அப்படியெல்லாம் இல்லை, படம் சூப்பராக இருக்கிறது கலெக்ஷனும் நன்றாகவே நடைபெறுகிறது என்றுதான் சொன்னார். விஜய்க்கு ரஜினி மீதும், ரஜினிக்கு விஜய் மீதும் அதிக மரியாதை இருக்கிறது. ரஜினி விஜய் இருவருக்கும் இடையே தற்போது வரை எந்த பிரச்சனையும் இல்லை. இடையில் இருப்பவர்கள்தான் தேவை இல்லாமல் பிரச்சினைகளை உருவாக்குகின்றனர் என்று ஆவேசத்துடன் பேசினார். இவ்வாறு தொடர்ந்து ஜெயிலர் போல நான்கு படங்களின் மேடைகளை தளபதி தான் ‘டாக் ஆஃப் தி டவுன்’ ஆக இருந்து அலற விடுகிறார்.

Also Read: மேடையில் அட்லி பூரிப்பில் பேசியதை துண்டாக தூக்கிய சன் டிவி.. விஜய் மீது இப்படி ஒரு கொலை வெறி தாக்குதலா!.

Trending News