சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தமன்னாவுடன் ஜோடி போட்ட 6 டாப் ஹீரோக்கள்.. அதுலயும் இந்த படம் வேற லெவல்

தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ,கல்லூரி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.தமன்னா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ஹிட் படங்களை தந்துள்ளார்

அஜித்: 2014ஆம் ஆண்டு இயக்குனர் சிவா இயக்கிய திரைப்படம் வீரம். இப்படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருப்பார். சந்தானம், பாலா, வித்ராந்த், நாசர், முனீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இப்படத்தில் தமன்னா கோப்பெருந்தேவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம்.

ajith-kumar
ajith-kumar

விஜய்: எசு.பி. ராஜ்குமாரின் இயக்கத்தில் தளபதி விஜயுடன் இணைந்து தமன்னா நடித்த படம் சுறா. இப்படம் விஜயின் 50வது திரைப்படம். இதில் வைகைப்புயல் வடிவேலு மற்றும் தமன்னா ஆகியோரின் காமெடி காட்சிகள் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது. இப்படத்தில் தமன்னா பூர்ணிமா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சுறா திரைப்படம் எதிர்பார்த்த அளவு சரியாக ஓடவில்லை.

vijay-cinemapettai
vijay-cinemapettai

சூர்யா: கே வி ஆனந்த் இயக்கத்தில் 2009 இல் வெளியான திரைப்படம் அயன். சூர்யாவுடன் இணைந்து தமன்னா நடித்திருந்தார்.இப்படத்தில் பிரபு, ரேணுகா, கருணாஸ், ஜெகன், பொன்வண்ணன் என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்தினை ஏவிஎம் சார்பாக எம் சரவணன் தயாரித்து இருந்தார். இப்படத்தில் தமன்னா யமுனா கதாபாத்திரத்தில் ஜெகன் தங்கையாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

suriya-cinemapettai
suriya-cinemapettai

தனுஷ்: 2009 இல் வெளியான படிக்காதவன் திரைப்படத்தில் தனுஷுடன் நடித்திருந்தார் தமன்னா. இத்திரைப்படத்தின் இயக்குனர் சுராஜ்.2011ல் வெளியான வேங்கை திரைப்படத்தில் மீண்டும் தனுஷுடன் இணைந்து தமன்னா நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், ஊர்வசி லிவிங்ஸ்டன், கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருந்தனர்.

dhanush
dhanush

கார்த்தி: லிங்குசாமி இயக்கத்தில் 2010ல் வெளியான திரைப்படம் பையா இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து தமன்னா நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான சிறுத்தை திரைப்படத்தில் கார்த்தியும் தமன்னாவும் சேர்ந்து நடித்தார்கள். இப்படத்தில் திருடன், போலீஸ் என இரட்டை கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருந்தார்.

வம்சி பைடிபைலி இயக்கத்தில் 2016இல் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியான திரைப்படம் தோழா. இப்படத்தில் நாகர்ஜூனா, கார்த்தி, தமன்னா, பிரகாஷ்ராஜ் என பலரும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் கார்த்திக், தமன்னா இருவரும் சீனு, கீர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.

karthi-cinemapettai-01
karthi-cinemapettai-01

விஜய் சேதுபதி: சீனு ராமசாமி இயக்கத்தில் 2016இல் வெளியான திரைப்படம் தர்மதுரை . இப்படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, சிருஷ்டி டங்கே, கஞ்சாகருப்பு, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் தமன்னா மருத்துவராக சுபாஷினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

vijay-sethupathi-cinemapettai
vijay-sethupathi-cinemapettai

Trending News