கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அவருக்கு பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் படம் தான்.
தொடர்ந்து வெகு விரைவிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார். சூர்யாவுடன் நடித்த அயன் படம் தமன்னாவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கியது.
விஜய்யுடன் சுறா படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வழக்கம்போல் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஆட்சி செய்து வந்த தமன்னாவுக்கு சமீபத்தில் கொரானா வந்தது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின்களுக்கு ஏற்ற உடல் அமைப்பு கொண்ட ஒரே நடிகை தமன்னா தான். செஞ்சி வச்ச சிலை மாதிரி இருந்த தமன்னா தற்போது பெசஞ்சு வச்ச மாவு மாதிரி கொழகொழவென்று ஆகிவிட்டார்.
தமன்னா நடிப்பில் கடைசியாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான நவம்பர் ஸ்டோரி என்ற வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அதே மாதிரி கதைகளில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம் தமன்னா.
இது ஒருபுறமிருக்க இரவு உடையில் தூங்கிக் கொண்டிருந்தவர் அப்படியே பகலில் வெளியே வந்து விட்டார் போல. அந்த உடையை பார்த்து பதறிப்போன ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.