திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மீசையுடன் சுற்றித்திரிந்த தமன்னா.. அண்ணாச்சியை புகழ்ந்து தள்ளிய மில்க் பியூட்டி

தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தின் மூலமா அறிமுகமாகி வில்லியா வந்தவங்க, இப்ப சின்ன பையன் கெட்டப்புல ஆட்டம் போடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவங்க தான் நம்ம மில்க் பியூட்டி தமன்னா.

நடிகை தமன்னா முதன்முதலில் “ஜிய ஓபராய்” என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமாகி, அதனைத் தொடர்ந்து சந்தியா என்ற தெலுங்குபடத்தில் நடித்து, அதன் பிறகு கேடி படத்தில் வில்லியாக அறிமுகம் ஆனாங்க. தமிழ் சினிமாவில் வில்லனா அறிமுகமாகி ஹீரோவாக ஜொலிக்கும் நட்சத்திரங்கள் போல் அதே லாஜிக்கில் தமன்னாவும் அறிமுகமானார்.

கேடி திரைப்படத்தைத் தொடர்ந்து படிக்காதவன், அயன், சுறா, பையா, தர்மதுரை,பாகுபலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு உள்ளார். அறிமுகமான ஆண்டுகளில் வெளியான திரைப்படங்கள் சரியாக இவருக்கு அமையவில்லை என்றாலும் கல்லூரி திரைப்படத்திற்குப் பின் பல வெற்றி படங்களை, பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து கொடுத்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம், ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து சினிமாவில் ஒரு நிலையானஇடத்தை பிடித்துள்ளார். வெள்ளித்திரை அல்லாது விளம்பர படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக, வெப்சீரிஸ் உள்ளிட்டவற்றில் கலந்து நடித்து வருகிறார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு மில்க் பியூட்டி தமன்னா சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த தி லெஜன்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு படத்தின் நாயகன் ஹீரோ பற்றி புகழ்ந்துள்ளார்.

தற்போது இணையத்தில் மில்க் பியூட்டி தமன்னா கோட் சூட் அணிந்து மீசை வைத்து சின்ன பையன் போல் எடுத்த வீடியோ ஒன்றை  பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Tammana
Tammana

Trending News