ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ரஜினியை சந்தோஷப்படுத்த விஜய்யை அசிங்கப்படுத்திய தமன்னா.. இனி உங்களுக்கு வாய்ப்பு இல்ல அம்மணி

Actress Tamannah: தமன்னாவுக்கு சில காலமாக தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறைய பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ஜெயிலர் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதிலும் காவாலா பாடலில் அவர் போட்டுள்ள குத்தாட்டம் வேற லெவலில் டிரெண்டானது. ரசிகர்கள் பலரும் இந்த பாடலை ரீல்ஸ் செய்து வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மீண்டும் மில்க் பியூட்டி தமிழ் சினிமாவுக்கு வந்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் பாலிவுட்டில் தமன்னா எல்லை மீறிய கவர்ச்சி காட்சிகளில் நடித்திருந்தார். இது பலருக்கும் முகம் சுளிக்க வைத்தது. ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள நிலையில் தமன்னா பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

Also Read : ஒண்ணுமே தெரியாத புள்ள பூச்சி போல் தமன்னா நடித்த 5 படங்கள்.. ஆனா இப்ப ஐட்டம் நடிகையாக மாறிட்டாங்களே

அதில் தளபதி விஜய்யை அசிங்கப்படுத்தும் விதமாக ஒரு காரியத்தை செய்திருக்கிறார். அதாவது தமன்னா விஜய்யுடன் இணைந்து சுறா படத்தில் நடித்திருந்தார். அந்த படம் நடிக்கும் போதே பெயிலியர் ஆகும் என்று தெரிந்ததாக தமன்னா கிண்டலடித்து பேசி இருந்தார். இதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம்.

ஆனால் அவர் செய்த மற்றொரு விஷயம் எல்லோரையுமே எரிச்சல் அடைய செய்தது. அதாவது தொகுப்பாளர் விஜய் என்று சொன்னவுடன் ரசிகர்கள் மத்தியில் கரகோஷம் எழுந்தது. ஸ்கிரீனில் விஜய் புகைப்படம் தெரிந்த நிலையில் அதை பார்த்து விட்டு பார்க்காதது போல் தமன்னா எந்த விஜய் என்பது போல் பேசி இருந்தார்.

Also Read : தமன்னாவுக்கு மரண பயத்தை காட்டிய ஹீரோயின்.. ஐட்டம் நடிகையாக மாறியதன் பின்னணி

அதாவது விஜய் சேதுபதி, விஜய் தேவர் கொண்டா என்று பலர் இருக்கிறார்கள் என நக்கலாக பதில் அளித்து இருந்தார். வேண்டுமென்றே விஜய்யை அசிங்கப்படுத்தி இருக்கிறார் தமன்னா என தளபதி ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். அதோடு மட்டுமின்றி தளபதி 68 படத்தில் தமன்னா தான் கதாநாயகியா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

அது உண்மை இல்லை என்று தமன்னா மறுப்பு தெரிவித்திருக்கிறார். இப்போது அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் விஜய்க்கு தான் என்ற பேச்சு ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்கும் நிலையில் ரஜினியின் ஜெயிலர் பட நாயகி தமன்னா இவ்வாறு சொல்வது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ரஜினியை சந்தோஷப்படுத்த விஜய்யை அவமானப்படுத்தி உள்ளதால் இனி தமன்னாவுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என்றும் கூறி வருகிறார்கள்.

Also Read : மாமனார், மருமகனுடன் கூச்சமே இல்லாமல் ஜோடி போட்ட 4 நடிகைகள்.. ஜெயிலரில் குத்தாட்டம் போட்ட தமன்னா

Trending News