புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மகா சிவராத்திரியை கொண்டாடிய நட்சத்திரங்கள்.. பரவச நிலையில் தமன்னா போட்ட ஆட்டம்

நேற்று நாடு முழுவதிலும் மகா சிவராத்திரியை மக்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடினார்கள். அதில் திரை பிரபலங்கள் இந்த வருட சிவராத்திரியை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதில் நடிகை தமன்னாவின் சிவராத்திரி கொண்டாட்டம் தான் பலரையும் கவர்ந்துள்ளது. அதாவது அவர் நேற்று ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரியை கொண்டாடி இருக்கிறார். வருடம் தோறும் இந்த கொண்டாட்டத்தில் கோலிவுட் முதல் பாலிவுட் பிரபலங்கள் வரை பலரும் கலந்து கொள்வது வழக்கம்.

Also read: சிவராத்திரி அன்று ரசிகர்களுக்கு காட்சி கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. இணையத்தில் ட்ரெண்டாகும் போட்டோஸ்

மேலும் அரசியல் பிரபலங்கள் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் நேற்று தமன்னா ஈஷா மையத்தில் பக்தி பரவச நிலையில் போட்ட ஆட்டம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் விடிகாலை வரை அவர் அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்று இருக்கிறார். அதில் அவர் ஜக்கி வாசுதேவுடன் இணைந்தும் நடனமாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக ஈஷா யோகா மையத்திற்கு வருகை தரும் தமன்னா மகா சிவராத்திரி கொண்டாட்டத்தை மட்டும் தவறவிடுவது கிடையாது. படங்களில் பிசியாக இருந்தாலும் கூட அவர் இந்த நிகழ்வில் கட்டாயம் கலந்து கொண்டு விடுகிறார். அதுவும் தற்போது அவர் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Also read: மொத்த குடும்பத்தையும் ஒத்த ஆளா தாங்கும் மருமகள்.. தனத்துக்கே பயங்கர டஃப் கொடுக்கும் மீனா

அதனாலேயே அவர் இந்த வருடம் படு உற்சாகமாக அந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டாராம். மேலும் ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஹிட்டடிக்க வேண்டும் என்ற வேண்டுதலையும் அவர் வைத்திருக்கிறார். அதேபோன்று சூப்பர் ஸ்டார் ரஜினியும் பெங்களூர் சிவன் கோவிலில் மகா சிவராத்திரியை கொண்டாடியிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து லியோ திரைப்படத்திற்காக காஷ்மீரில் இருக்கும் த்ரிஷாவும் அங்கேயே சிவனுக்கு வழிபாடு செய்திருக்கிறார். அந்த போட்டோவும் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இப்படி பல பிரபலங்களும் நேற்றைய தினத்தை சிறப்பாக கொண்டாடி இருக்கின்றனர்.

Also read: 3 மடங்கு செலவை இழுத்துவிட்ட லியோ லோகேஷ்.. மொத்த லாபமும் இதுலே போயிடுமோ என பயத்தில் தயாரிப்பாளர்

Trending News