வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

திருமணத்திற்கு தயாரான தமன்னா.. வேற வழி தெரியாமல் திடீரென எடுத்த முடிவு

தமன்னா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஆக்சன். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதனால் தமன்னாவின் மார்க்கெட் சற்று குறையத் தொடங்கியது.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் முன்பு போல் தமன்னாவிற்கு வரவேற்பு இல்லை என்பதால் மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறியுள்ளார். மேலும் மன அழுத்தத்தில் இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது தமன்னா மன அழுத்தத்தில் இருந்ததை கேட்ட பலரும் காதல் தோல்வி ஏற்பட்டு விட்டது எனக் கூறி வருகின்றனர். மேலும் படங்களும் பெரிய அளவு வெற்றி பெறாததால் இவருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் வேதனையில் இருந்துள்ளார். இந்த இரண்டுமே ஒரே சமயத்தில் அவருக்கு வந்ததால் தான் மன அழுத்தத்தில் பாதித்தார் என அவரது நெருங்கிய சினிமா நண்பர்கள் கூறிவருகின்றனர்.

tamannah
tamannah

ஆனால் சமீபத்தில் இதைப் பற்றி தமன்னாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தமன்னா ஆமாம் நாம் உண்மையிலேயே மன அழுத்தத்தில் தான் இருந்தேன் மேலும் இதனால் உடல்நலமும் பாதித்தது எனக் கூறினார். ஆனால் எதற்காக மன அழுத்தத்தில் இருந்தார் என்பதை அவரும் தெளிவாக கூறவில்லை.

மேலும் உடல்நலம் மிகவும் பாதித்ததால் தற்போது உணவுகளில் கவனம் செலுத்துவதாகவும் ஆர்கானிக் உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் . மேலும் திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என கூறியுள்ளார். இவர் சொல்வதை பார்த்தால் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News