வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

மூத்த நடிகருடன் ஜோடி சேர்ந்த தமன்னா.. பட வாய்ப்பிற்காக எடுத்த அதிரடி முடிவு.!

கேடி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா. இருப்பினும் இவருக்கு கல்லூரி படமே மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்தது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கல்லூரி படத்தில் தமன்னாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. இதனை அடுத்து படிப்படியாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக முன்னேறினார்.

விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த தமன்னா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது தெலுங்கில் மூத்த நடிகர் ஒருவருடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் தமன்னா.

தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான வேதாளம் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. போலோசங்கர் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் அஜித் கேரக்டரில் தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார். அதேபோல் அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்த கேரக்டரில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இப்படத்தில் நாயகிக்கான தேடுதல் வேட்டை நடைபெற்று வந்த நிலையில், நடிகை தமன்னா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி தமிழில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்த வக்கீல் கேரக்டரில் தமன்னா நடிக்க உள்ளாராம். தமன்னா ஏற்கனவே சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

tamannah-cinemapettai-01
tamannah-cinemapettai-01

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டது எனவும் கூறப்படுகிறது. சிரஞ்சீவி தற்போது ஆச்சாரியா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. எனவே இந்த படத்தை முடித்த பின்னர் போலோசங்கர் படம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News