தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவரான அவர் தமன்னா. கேடி என்ற சுமாரான படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அதன் பிறகு வெகு விரைவிலேயே சூர்யா மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்ததால் தென்னிந்தியா முழுக்க பிரபலமான நடிகையாக மாறினார். அன்றிலிருந்து இன்றுவரை தமன்னாவுக்கு ஏறுமுகம்தான்.
முதலில் கமர்சியல் நாயகியாக கலக்கி வந்த தமன்னா தற்போது கதையின் நாயகியாகவும் நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார். வெப் சீரிஸ் போன்றவற்றிலும் தமன்னாவின் சாய்ஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்படி தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வரும் தமன்னா எதற்காக அறுபத்தி ஆறு வயது நடிகருடன் ஜோடி போடுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி கடந்த சில வருடங்களாக அரசியலை விட்டு விலகி மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது அவர் ரீ என்ட்ரி கொடுத்தாலும் அவரது படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகின்றன. இந்நிலையில் அடுத்ததாக மலையாள சூப்பர் ஹிட் படமான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து தமிழில் அஜீத் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு பதிப்பிலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கச்சியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் நாயகியாக நடித்த ஸ்ருதிஹாசன் கதாபாத்திரத்தில் முதலில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனால் தற்போது காஜல் அகர்வால் அந்த படத்திலிருந்து விலக பெரிய அளவு சம்பளம் பேசி தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. தமன்னா கதை பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை கேட்பதை கொடுத்தால் நடிக்கிறேன் என்று கூறி விட்டாராம். இதனால் சட்டுனு போய் பட்டுன்னு தமன்னாவை புக் செய்து விட்டதாம் படக்குழு.