தமிழ் சினிமாவில் நடிகர்களின் நட்பைத் தாண்டி நடிகைகளும் சமீபகாலமாக சக நடிகைகளின் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அப்படி சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை தமன்னா மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் நெருங்கிய தோழிகளாக உள்ளனர்.
அதிலும் குறிப்பாக தங்களது வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்களையும் சினிமாவில் அடுத்து என்னென்ன சாதிக்கப் போகிறோம் என்ற விஷயங்களையும் பற்றியும் கூட இருவரும் வெளிப்படையாக பேசிக் கொள்ளும் அளவிற்கு நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். அந்த அளவிற்கு தனது நட்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர் இருவரும்.
இவர்கள் இருவரும் அனைத்து பேட்டிகளிலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்காமல் பேசுவதும் ஒருவரை மற்றவர் புகழ்ந்து பேசுவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி சமீபத்தில் பேட்டி ஒன்றில் தமன்னா ஸ்ருதிஹாசனை வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
தமன்னா தனது தோழியான ஸ்ருதிஹாசனை அன்மை பேட்டி ஒன்றில் சில சமயங்களில் நான் சோர்வாக இருக்கும்போது உடனே ஸ்ருதிஹாசனுக்கு போன் செய்து எப்படி நீ உற்சாகமாய் இருக்கிறாய் எனக் கேட்பேன். அதற்கு காரணம் எப்போதும் ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் கடினம் என்பது தான் எனக் கூறினார்.
மேலும் சுருதிஹாசன் தனது வீட்டை பார்த்து கொள்ளும் விதம், அதுமட்டுமில்லாமல் வீட்டில் தனிமையாக இருந்தாலும் அதிகம் உழைப்பார். சமூக வலைதளங்களில் எப்போதும் ரசிகர்களுடன் கலந்துரையாடுவார். அவர் நேர்மையான வழியில் தான் செயல்படுவார்.
அதுமட்டுமில்லாமல் எப்போதும் நகைச்சுவை உணர்வுடன் பேசுவார். நான் விரும்பும் நடிகைகளில் ஸ்ருதிஹாசன் முதன்மை இடத்தில் வைத்துள்ளேன் என கூறினார். இந்த மாதிரி ஸ்ருதிஹாசனை புகழ்ந்து தள்ளியுள்ளார் தமன்னா. இதிலே தெரிகிறது தமன்னா மற்றும் ஸ்ருதிஹாசன் இருவருக்கு இடையிலும் எந்த ஒரு போட்டியும் பொறாமையும் இல்லை என்பது. இதனை பார்த்து இவர்களது நட்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.