வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஐட்டம் பாட்டுக்கு இத்தனை கோடியா.? ஜெயிலர் படத்துக்காக தமன்னா வாங்கிய சம்பளம்

Actress Tamannah: மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் நேற்று வெளியானது. நெல்சன் இயக்கத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் போன்ற பான் இந்தியா நடிகர்களும் இடம்பெற்றிருந்தனர்.

இதனாலேயே இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிக அளவில் இருந்தது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் ஜெயிலர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. படத்தில் சில நெகட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் மொத்தமாக பார்க்கையில் தலைவரின் அலப்பறை தாறுமாறாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Also read: எளிமையின் மொத்த உருவமாய் இருக்கும் சூப்பர் ஸ்டார்.. இமயமலையிலிருந்து வெளியான லேட்டஸ்ட் போட்டோ

அந்த வகையில் நெல்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் இருவருக்குமே இப்படம் மிகப்பெரிய கம்பேக் என்றுதான் சொல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல் காவாலா என்ற பாடல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் குத்தாட்டம் போட வைத்த தமன்னாவும் புகழ்பெற்றிருக்கிறார்.

படத்தில் அவருக்கு பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும் இந்த பாடலை ரிப்பீட் மோடில் பார்க்க தோன்றுகிறது. அந்த வகையில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்திருக்கும் தமன்னாவுக்கு இன்னும் கொஞ்சம் அதிக காட்சிகள் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் வருத்தத்தோடு புலம்பி வருகின்றனர்.

Also read: தூக்கிட்டு வாங்க அந்த செல்லத்தை.. ஜெயிலரில் வாய்ப்பு வாங்கிய மாவீரன் பட நடிகர்

இருப்பினும் அவர் இந்த ஒரு பாடலுக்காக கோடி கணக்கில் சம்பளம் வாங்கி இருக்கிறார் என்பது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. அந்த வகையில் தமன்னாவுக்கு ஜெயிலர் படத்திற்காக மூன்று கோடி வரை சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு பாட்டு, நாலு சீனுக்கு இவ்வளவா என்று பலருக்கும் வியப்பாகத்தான் இருக்கிறது.

ஆனாலும் அவர் போட்ட ஆட்டம் தான் படத்திற்கு மிகப்பெரும் பிரமோஷன் ஆக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை. அதனாலேயே சன் பிக்சர்ஸ் சந்தோஷத்தோடு அவருக்கு கோடிகளை கொட்டிக் கொடுத்திருக்கிறது. மில்க் பியூட்டியும் ஐந்து நாள் நடித்துவிட்டு 3 கோடிகளை தட்டி சென்று இருக்கிறார்.

Also read: ஓ சொல்றியா மாமாவுக்கு ஒரு காவாலய்யா! ரஜினியை பின்னுக்கு தள்ளிய தமன்னா, ப்ளூ சட்டையின் சேட்டை

Trending News