வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பெட்ரூம் காட்சியில் தாராளம் காட்டிய மில்க் பியூட்டி.. ஷாக் கொடுத்த தமன்னாவின் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 டீஸர்

ஒரு காலத்தில் தமிழில் ரவுண்டு கட்டி நடித்து வந்த தமன்னா கடந்த சில வருடங்களாக கோலிவுட்டை ஓரங்கட்டி விட்டு தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வந்தார். இப்படி பிசியாக இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டாருடன் நடித்த வாய்ப்பு வந்ததால் தமன்னா தற்போது மீண்டும் தமிழ் பக்கம் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவரின் கைவசம் ஜெயிலர், அரண்மனை 4 படங்கள் இருக்கிறது. இன்னும் சில திரைப்படங்களிலும் இவர் பிஸியாக நடித்து வருகிறார் இந்நிலையில் இவர் நடித்துள்ள லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆந்தாலாஜி தொடரின் டீசர் தற்போது வெளியாகி அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

Also read: லவ்வருடன் வசமாக சிக்கிய தமன்னாவின் ட்ரெண்டாகும் போட்டோ.. கருப்பு உடையில் கலக்கலாக வந்த ஜோடி

ஏனென்றால் அதில் தமன்னா இதுவரை இல்லாத அளவுக்கு தாராளம் காட்டி இருக்கிறார். ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு இதன் முதல் பாகம் வெளிவந்து மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதைத்தொடர்ந்து தற்போது வெளியாக இருக்கும் இந்த இரண்டாம் பாகமும் அடுத்த கட்ட விமர்சனத்திற்கு தயாராகி இருக்கிறது.

அதாவது தற்போது வெளியாகி இருக்கும் இந்த டீசரின் ஆரம்பமே சர்ச்சைக்குரியதாக தான் இருக்கிறது. அதாவது ஒரு கார் வாங்கும் போது டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பது போல் திருமணத்திற்கு முன்பும் டெஸ்ட் டிரைவ் இருக்க வேண்டும் என்ற வசனத்தோடு தான் இந்த டீசர் தொடங்குகிறது.

Also read: மார்க்கெட் இறங்கியதால் மதிக்காத சுந்தர் சி.. ஒயிட் பியூட்டி தமன்னாவின் பரிதாப நிலை

அதைத்தொடர்ந்து கஜோல், தமன்னா, மிருணால் தாகூர் ஆகியோர்களின் காட்சிகள் காட்டப்படுகிறது. அதில் தமன்னா தான் ரொம்பவும் கவர்ச்சி தரிசனம் கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து வரும் ஒரு படுக்கை அறை காட்சியை பார்க்கும் போது தமன்னா இதில் முடிந்த அளவு தாராளமாக நடித்திருப்பார் என்று தெரிகிறது.

ஏனென்றால் இப்போது அவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் இந்த ஜோடி அடிக்கடி பொதுவெளிகளில் தென்படுகின்றனர். இந்நிலையில் இந்த டீசரில் விஜய் வர்மாவுடன் அவர் காட்டி இருக்கும் நெருக்கமும் அதை உறுதிப்படுத்தும் விதமாகவே இருக்கிறது.

Also read: ஐட்டம் டான்ஸராக மாற பல கோடி சம்பளம் கேட்ட தமன்னா.. சமந்தாவை ஓவர் டேக் செஞ்சிருவாங்க போல

Trending News