புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சூர்யாவுக்கு வில்லனாகும் தமன்னாவின் அந்தரங்க காதலன்.. ரொமான்டிக் ஹீரோவாச்சே, சுதா கொங்கரா யூனிவர்ஸ்

Actor Suriya: சூர்யா தற்போது  சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது தாய்லாந்தில் இருக்கும் மொத்த பட குழுவும் முழு படப்பிடிப்பை வரும் நவம்பர் நவம்பர் மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அடுத்த கோடை விடுமுறையில் படம் வெளியாக போகிறது.

இந்த படத்திற்கு பின் சூர்யா அடுத்து யார் படத்தில் நடிப்பார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. சூரரைப் போற்று படத்திற்குப் பிறகு சூர்யா மறுபடியும் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டது. இதில் சூர்யாவுடன் துல்கர் சல்மான் சேர்ந்துள்ளார்.

Also read: மாரிமுத்துவின் கடைசி ஆசையை நிறைவேற்றும் சூர்யா.. புல்லரிக்க வைக்கும் விஸ்வாசம்

முக்கியமாக தமன்னாவின் காதலன் விஜய் வர்மா நடிக்கிறார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியானது. தற்சமயம் தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் வெளிநாடுகளில் தனியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.

அத்தகைய தமன்னாவின் அந்தரங்க காதலரான விஜய் வர்மா இப்போது சூர்யா அடுத்து நடிக்கும் சுதா கொங்கரா யூனிவர்ஸ் படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. அவர் முகமே ரொமான்ஸ் செய்வது போல் தான் இருக்கிறது. இவரை வைத்து எப்படி வில்லனாக என்று யோசிக்க முடியவில்லை.

Also read: கவர்ச்சி ஆட்டத்திற்காகவே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய 5 நடிகைகள்.. சமந்தாவுக்கே டஃப் கொடுத்த ரம்யா கிருஷ்ணன்

அவரது லுக் ரொமான்டிக் ஹீரோ போல் இருப்பதால் சூர்யாவிற்கு வில்லனாக எப்படி செட்டாகுவாரா என தமிழ் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இருப்பினும் சுதா கொங்கரா தன்னுடைய படத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யக் கூடியவர் என்பதால் காரணத்தோடு தான் விஜய் வர்மாவை தேர்வு செய்திருப்பார்.

அத்துடன் இந்த படத்தில் வேறு யாரெல்லாம் இருக்கப் போகிறார் என்று கூடிய விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட தான் படமாக எடுக்கிறார்கள்.

Also read: ஜோதிகா அளவுக்கெல்லாம் என்னால் நடிக்க முடியாது.. சந்திரமுகி வாய்ப்பை உதறித் தள்ளிய நடிகை

Trending News