தமிழ் சினிமாவில் எப்படியோ, ஆனால் தெலுங்கு சினிமாவை பொருத்தவரை தமன்னா மற்றும் ஸ்ருதி ஹாசனுக்கு எப்போதுமே மார்க்கெட் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
இருவரும் கமர்சியல் படங்களுக்கு ஏற்ற பக்காவான ஹீரோயின்களாக இருப்பதால் வருடத்திற்கு குறைந்தது மூன்று படமாவது தெலுங்கில் கிடைத்துவிடுகிறது. அந்த வகையில் தமன்னா ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்லலாம்.
மேலும் இயக்குனரின் நடிகைகள் கூட. படத்தில் குடும்ப பாங்கான வேடமாக இருந்தாலும், கவர்ச்சி வேடமாக இருந்தாலும் சரிசமமாக நடித்துக் கொடுப்பதில் இருவருமே வல்லவர்கள் தான்.
தற்போது தமன்னா மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர். மேலும் இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கியுள்ளார்களாம்.
சமீபத்தில் இருவரும் படுக்கையில் குட்டையான உடையில் கட்டிக்கொண்டு புகைப்படம் எடுத்து ரசிகர்களை ஏங்க வைத்துள்ளனர்.
ஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்ததாக தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் என படம் வெளியாக உள்ளது. தமன்னாவுக்கு தற்போது தமிழில் கைவசம் படங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.