செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

காதலருக்காக சூர்யாவிடம் கெஞ்சி கூத்தாடிய தமன்னா.. என்ன இந்த அளவுக்கு இறங்கிட்டாங்க!

Suriya-Tamannah: மில்க் பியூட்டி தமன்னா சில வருடங்களாகவே ஹிந்தி, தெலுங்கு பக்கம் கவனம் செலுத்தி வந்த நிலையில் ஜெயிலர் அவரை ஓவர் நைட்டில் ட்ரெண்ட்டாக்கி விட்டது. காவாலா பாட்டுக்கு அவர் போட்ட ஆட்டம் சிறுசு முதல் பெரியவர்கள் வரை ரசிக்க வைத்தது. இந்த சூழலில் இவர் தன் காதலருக்காக சூர்யாவிடம் கெஞ்சிய சம்பவமும் நடந்திருக்கிறது.

தமன்னா ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். இது கேள்விப்பட்டதிலிருந்தே பல ரசிகர்கள் அவர் எதற்காக இவரை தேர்ந்தெடுத்தார் என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளாத குறையாக புலம்பித் தீர்த்தனர். அதிலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தில் இடம்பெற்றிருந்த ஓவர் ரொமான்ஸ் வாயடைக்க வைத்தது.

அப்படி இவரிடம் என்ன இருக்குன்னு தமன்னா உருகி உருகி காதலிக்கிறார் என வெளிப்படையாகவே சிலர் சோசியல் மீடியாவில் கதறி வந்தனர். ஆனால் இதெல்லாம் அவர்களுடைய சொந்த விஷயம். இதில் எதற்கு நாம் தலையிட வேண்டும், இப்போது விஷயத்திற்கு வருவோம். அதாவது மில்க் பியூட்டி தன் லவ்வரை தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று சில மாதங்களாகவே பெரும் முயற்சி எடுத்து வந்தார்.

அதிலும் தனக்கு தெரிந்த பல டாப் ஹீரோக்களுக்கும் போன் போட்டு இவர் வாய்ப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று சூர்யா, சுதா கொங்கரா கூட்டணியின் புறநானூறு படம் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் துல்கர் சல்மான், நஸ்ரியா ஆகியோர் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

மேலும் தமன்னாவின் காதலரும் இதில் நடிக்க இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பின்னணி என்று பார்த்தால் சூர்யா தான் இருக்கிறார். ஏனென்றால் தமன்னாவின் தொடர் நச்சரிப்பு தாங்காமல் இதில் போனா போகிறது என்று வாய்ப்பை அவர் கொடுத்திருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

இத்தனைக்கும் விஜய் வர்மா அப்படி ஒன்னும் நன்றாக நடிப்பவர் கிடையாது. ஆனாலும் அவருக்கு காதலியின் தயவால் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் இதில் அவர் வில்லனாக நடிக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆக மொத்தம் தமன்னா ஒரு வழியாக தன் காதலருக்கு மிகப்பெரிய டீமில் இடம் வாங்கி கொடுத்திருக்கிறார். இது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பதை நாம் படம் வந்தால் தான் தெரிந்து கொள்ள முடியும்.

Trending News