தமிழ் சினிமாவில் தமிழ் மொழி நடிகர்கள் நடித்ததை விட மற்ற மொழி நடிகர்கள் தான் அதிகம் நடித்துள்ளனர். அதற்குக் காரணம் மற்றும் மொழி நடிகைகளின் கவர்ச்சியை விரும்புவதுதான். தமிழ் சினிமாவில் பெரிய அளவில் தமிழ் பேசும் நடிகைகள் இல்லை என்பது உண்மை.
சமீபகாலமாக தமிழ் பேசும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பே கிடைப்பதில்லை என ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதனை பற்றி விசாரிக்கும்போது அதற்குப் பலரும் பல்வேறு பதில்களை முன்வைத்தனர்.
அதாவது மற்ற மொழிகளில் நடித்து சொல்வதற்கு காரணம் அவர்கள் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் எப்படி நடிக்க சொன்னாலும் அதனை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் தமிழ் நடிகைகள் அவளுக்கு பிடித்த கதை மற்றும் கதாபாத்திரங்களை மட்டும் தான் நடிப்பார்கள் என ஒரு தரப்பினர் கூறியுள்ளனர்.
மேலும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரியான நடிகைதான் தேடுகிறோம் உண்மையில் தமிழ் தெரிந்தவர்கள் இருந்தால் எங்களுக்கு வேலை எளிதாக முடிந்து விடும் அதுமட்டும் அல்ல கதாபாத்திரம்தான் நடிகையும் முடிவையும் செய்கிறது. தமிழ் பேசும் நடிகைகளுக்கு தான் இயக்குனர்களின் முதல் சாய்ஸ்.
தமிழ் பேசத் தெரிந்த நடிகைகள் தங்களை வெளிப்படுத்த முன்வர வேண்டும் எனவும் மொழி தெரிந்தவர்கள் படத்தில் நடிப்பது எங்களுக்கு பலம் தான் எனவும் கூறியுள்ளனர்.
இனிமேலாவது தமிழ் நடிகர்கள் ஒரு உஷாராக கொள்வார்களா என்பது தெரியவில்லை ஆனால் தமிழ் நடிகர்கள் முன்வந்து தங்களது திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே இனிமேலாவது தமிழ்சினிமாவில் ஒரு சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.